ETV Bharat / education-and-career

2,236 இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய சிக்கல்! மாணவர்களை சேர்க்காவிட்டால் மாறுதல்! - elementary teachers transfer issue

TN Department of School Education: தமிழ்நாட்டில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் கூடுதலாக மாணவர்களை சேர்த்து உபரி பணியிடங்களை குறைக்க வேண்டும், இல்லையெனியில் அந்தந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவார்கள் என தொடக்க கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

elementary teachers transfer issue
elementary teachers transfer issue
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 12:12 PM IST

Updated : Apr 26, 2024, 3:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வந்தது. அதனால், இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, 3 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில், தொடக்கப் பள்ளிகளில் போதுமான அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், 2023 ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி, 2,236 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக கண்டறியப்பட்டன.

TN Department of School Education notification

ஆனால் தொடக்க கல்வித்துறையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். ஆகையால், அவர்களை ஆசிரியர் தேவையாக உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மேலும், உபரி ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அந்த கணக்கின் அடிப்படையில் பணியிடம் மாறுதல் வழங்கப்படாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், "தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் (1.8.2023) நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிடங்கள் (Surplus post with Teacher) கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்களின் (Surplus post with Teacher) விவரம் மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் அனுப்பப்பட்டுள்ளது.

2024 - 2025ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டின்படி கண்டறியப்பட்டுள்ள ஆசிரியருடன்
கூடிய உபரி பணியிடங்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு விரைவில் நடைபெறவுள்ளதால் அந்த கலந்தாய்வில் தற்போதுள்ள மாணவர்கள் சேர்க்கையினையும் கருத்தில் கொண்டு பணிநிரவல் செய்யப்படும்.

ஆகையால், தற்போது நடைபெற்று வரும் 2024 - 2025ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைப் பணிகளில் அனைத்து வகை சார்நிலை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு, 30,042024க்குள் அதிகபட்ச மாணவர்களின் சேர்க்கைக்கான நடவடிக்கை எடுத்து கூடுதல் மாணாக்கர்களை பள்ளிகளில் சேர்த்து பெரும்பாலான ஆசிரியருடன் கூடிய உபரிப் பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியருடன் கூடிய உபரிப் பணியிடங்கள் 2,236 (இடைநிலை ஆசிரியர்கள்) எனக் கண்டறியப்பட்டுள்ள பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு - Street Dog Issue

Last Updated : Apr 26, 2024, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.