சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்று இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில், தற்பொழுது 116 கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும், நடப்பாண்டில் 10க்கும் மேற்பட்டக் கல்லூரிகள் தன்னாட்சி அனுமதி பெற உள்ளது. தன்னாட்சி அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பட்டங்களை அண்ணா பல்கலைக் கழகம் வழங்குகிறது.
ஆனால், அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தாது. அந்தந்தக்கல்லூரிகளில் வினாத்தான் வடிவமைக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். தன்னாட்சிக் கல்லூரியில் இருந்து பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில், அவர்களுக்கு கிரேடு வழங்கி பட்டப்படிப்பிற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 271 சிண்டிக் கேட் கூட்டம் ஜூலை 29 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானமாக, தன்னாட்சி பொறியியல் கல்லூரியிலும் தரமான கல்வி வழங்கும் வகையில் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தன்னாட்சி கல்லூரியில் வழங்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளும், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு பாடத்திற்கான வினாத்தாளை அமைக்க பல்கலைக்கழகம் தயாரித்து தேர்வுகளை நடத்தி, விடைத்தாள் திருத்தம் செய்து மதிப்பெண்களை வழங்கும். அந்த செமஸ்டர் தேர்வில் பிறப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் குறைவாக இருந்தால் அது குறித்து விசாரிக்கப்படும்.
தேசிய தரவரிசை பட்டியலில் 200 வரையில் இடம் பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக் கழகம் தேர்வுகளை நடத்தாது. தகுதியற்ற நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதில் உள்ள தரச் சிக்கல்கள் குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு தெரிவிக்கப்படும். தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தரத்தை உறுதிசெய்யவும், இணைப்புச் சட்டங்களில் பொருத்தமான திருத்தங்களைச் செய்யவும் நடைமுறைப்படுத்தப்படும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஜவுளி கழிவு மறுசுழற்சி தொழிலுக்கு தனி வாரியம் அமைக்க வலியுறுத்தல்!