ETV Bharat / business

சுங்க வரி குறைந்தாலும் தங்கம் விலை உயரும்.. ஏன் தெரியுமா? - gold price

India slashes import tax on gold: சுங்க வரி குறைந்துள்ளதால் தங்கத்தின் விலை தற்போது குறைந்தாலும் வருங்காலங்களில் மீண்டும் விலை உயரும் என தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 7:16 PM IST

சென்னை: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கான வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்து அறிவித்தார். அறிவிப்பு வெளியான சில நமிடங்களிலேயே, பங்குச் சந்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.

இதன் தாக்கத்தால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைத்து அறிவிக்கப்பட்ட உடனே தங்கம் விலையில் உடனடியாக இறக்கம் எதிரொலித்துள்ளது. அதன்படி, இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான வரியை குறைத்துள்ளது குறித்தும், தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது குறித்தும் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசிடம் சுங்க வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைத்திருந்தோம். அந்த கோரிக்கைக்கு ஏற்றார் போல் பட்ஜெட்டில் மத்திய அரசு சுங்க வரியை குறைத்துள்ளது. சுங்க வரியை குறைத்துள்ளதால் பொதுமக்களுக்கு நல்லதாக அமைந்துள்ளது. ஒரே நாளில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது, இது பொதுமக்களுக்கு நல்லதாக இருந்தாலும், வியாபாரிகளுக்கு இதில் சில இடற்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.

தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார்
தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

வருங்காலங்களில் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிக்கும். இதனால் வியாபாரிகளுக்கும் வியாபாரம் பெருகும். முன்பு வரி கூடுதலாக இருந்ததால் தங்கத்தை கடத்திக் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இது மிகப்பெரிய சவாலாக இருந்தது. தற்போது தங்கத்தின் இறக்குமதி வரியை குறைத்துள்ளதால் தங்கக் கடத்தல் வெகுவாக குறையும்.

தற்போது தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் வருங்காலத்தில் தங்கத்தின் விலை உயர்வதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், தங்கத்தின் முதலீடு செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து தங்கத்தின் விலையும் உயரக்கூடும். வருங்காலங்களில் தங்கத்தின் விலை உயர்வதால் வியாபாரிகளுக்கு இதில் நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது'' என சாந்தகுமார் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பட்ஜெட் 2024; தொழில் சங்கங்களின் வரவேற்பும் எதிர்ப்பும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.