சென்னை: இந்திய மக்களிடையே எதிர்காலத்திற்கான சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது நகை சேமிப்பு. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் இன்று (செய்வாய்கிழமை) காலை விலை நிலவரப்படி, தங்கத்தின் கிராமுக்கு ரூ.85 அதிரடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு கிராம் 6 ஆயிரத்தைக் கடந்தும், சவரன் 48 ஆயிரத்தைக் கடந்தும் விற்பனையாகி வருகிறது. மேலும் டாலர்களின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை ஏற்றமானது உள்ளநாட்டுச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 15க்கும், ஒரு சவரன் ரூ.48 ஆயிரத்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.78 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மார்ச் 5 இன்றைய விலை நிலவரம்:
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,015
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.48,120
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,485
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.51,880
- 1 கிராம் வெள்ளி - ரூ.78.20
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,200