சென்னை: இந்தியர்களின் சேமிப்பு திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம். மேலும், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் பரிசாக அளிப்பதற்கும் தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகமாகவே உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிகமாக இறக்குமதி செய்ய்யப்படுகிறது. அதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவிலும் அவ்வப்போது தங்கம் விலை மாற்றப்பட்டு வருகிறது.
அதிலும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தபடியே உள்ளது. மார்ச் 4ஆம் தேதி ரூ.5 ஆயிரத்து 930க்கு விற்பனையான 22கேரட் ஆபரணத் தங்கம் 5ஆம் தேதி தடாலடியாக ரூ.85 உயர்ந்து கிராம் ரூ.6 ஆயிரத்து 15 என்னும் உயரத்தை எட்டியது. 6ஆம் தேதி மீண்டும் ரூ.25 உயர்ந்த ஆபரணத் தங்கம் 7ஆம் தேதி மீண்டும் ரூ.50 உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 90க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ள ஆபரணத் தங்கம் ரூ.6 ஆயிரத்து 105 என்னும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சென்னையில் சவரன் ரூ.48 ஆயிரத்து 840க்கும் விற்பனை ஆகிறது. மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 8 வரை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.175 உயர்ந்து உள்ளது. 4ஆம் தேதி சவரன் ரூ.47 ஆயிரத்து 440ஆக இருந்த நிலையில் இன்று வரை ரூ.1,400 உயர்ந்து சவரன் ரூ.48 ஆயிரத்து 840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 24கேரட் தங்கமும் தொடர்ந்து விலை உயர்ந்தபடி உள்ளது. சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் கிராம் ரூ.6 ஆயிரத்து 575க்கும், ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்து 600க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில் வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.79க்கும் கிலோ ரூ.79 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.100 குறைவு.. மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு!