சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம், மார்ச் 23 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 205க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்து 640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 80.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80 ஆயிரத்து 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மார்ச் 25 இன்றைய விலை நிலவரம்:
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,205
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.49,640
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ. 6,675
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.53,400
- 1 கிராம் வெள்ளி - ரூ.80.80
- 1 கிலோ வெள்ளி - ரூ.80.800
தேதி | தங்கம் விலை கிராமில் (22K) |
மார்ச் 16 | ₹ 6,115 |
மார்ச் 17 | ₹ 6,115 |
மார்ச் 18 | ₹ 6,090 |
மார்ச் 19 | ₹ 6,135 |
மார்ச் 20 | ₹ 6,140 |
மார்ச் 21 | ₹ 6,235 |
மார்ச் 22 | ₹ 6,200 |
மார்ச் 23 | ₹ 6,185 |
மார்ச் 24 | ₹ 6,185 |
மார்ச் 25 | ₹ 6,205 |