ETV Bharat / business

புத்தாண்டு வரை தேங்காய் விலை உச்சம் தான்.. ஏன்? எப்போது விலை குறையும்? - Coconut Prices Increase In TN - COCONUT PRICES INCREASE IN TN

நல்ல மழை பெய்து மரங்களில் மீண்டும் காய் பிடித்து சந்தைக்கு வர குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும் என்பதால், வரும் ஜனவரி 2025 வரையில் தேங்காய் விலை குறைய வாய்ப்பில்லை என்று தேங்காய் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் விற்பனையாளர்
தேங்காய் விற்பனையாளர் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 6:53 PM IST

தஞ்சாவூர்: பொதுமக்களின் சமையல் பயன்பாட்டில், நாள்தோறும் முக்கிய அங்கம் வகிக்கும் பொருட்களில் தேங்காயும் ஒன்று. இந்த தேங்காய் விலை பொதுவாக ஒரே சீராகத்தான் இருக்கும். எப்போதாவது ஒரு முறை தான் விலை ஏற்றம் இருக்கும். பிறகு, காய்கள் வரத்து அதிகரித்து தானாகவே விலை குறையத் தொடங்கும் என்பது வாடிக்கை.

ஆனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தேங்காய் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் டன் ஒன்றுக்கு ரூ.28 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.70 ஆயிரம் என ஒன்றரை மடங்கு அளவிற்கு விலை கூடியுள்ளது. இதனால் சில்லறை விலையில் ஒரு காய் ரூ.25 முதல் 30 வரை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேங்காய் வணிகர்கள் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

ஏற்கனவே, கடும் வெயில் காரணமாக காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தற்போது தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தேங்காய் விலை உயர்வு குறித்து தேங்காய் வணிகர்கள் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "உரிய மழை இல்லாத சூழலிலும், கடும் வெயில் காரணமாகவும் தென்னை மரங்களில் உள்ள குரும்பைகள் கீழே கொட்டிவிடுவதால், காய்ப்பு குறைந்துள்ளது.

ஆனால், தேங்காயின் தேவை அதிகம் இருப்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தேங்காய்கள் தான் பெரும்பாலும் வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், நல்ல மழை பெய்து மரங்களில் மீண்டும் காய் பிடித்து சந்தைக்கு வர குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம்.

இதையும் படிங்க: பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி தடை நீக்கம்.. விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆகவே, இதுபோன்ற சூழ்நிலையில், தேங்காய் வரத்து அதிகரிக்கும் வரையில் விலை குறைய வாய்ப்பில்லை. மேலும், தொடர்ந்து நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தேங்காயின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்ற அடிப்படையில், விலை குறைய வாய்ப்பில்லை.

என்று நல்ல மழை பெய்து, தென்னை மரங்களில் உள்ள குரும்பைகள் ஆரோக்கியமானதாக உருவாகி, காய் பிடிக்கத் தொடங்கி, அவை சந்தைக்கு வர குறைந்தபட்சம் 40 முதல் 50 நாட்கள் ஆகும் என்பதால், வரும் ஜனவரி 2025 வரையில், அதாவது இன்னும் 4 மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை" என்று அதிர்ச்சி தகவல்களை வழங்கியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.