ETV Bharat / bharat

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல்? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 4th Phase: ஆந்திரா பல்நாடு மாவட்டத்தில் உள்ள மச்செர்லா மண்டலத்தில் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

File photo of Chandrababu Naidu and Jagan Mohan Reddy
சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் கோப்பு படம் (Credit - ETV Bharat AP Desk)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 3:58 PM IST

அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவானது 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் என மொத்தமாக 96 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (மே 13) நடைபெறுகிறது.

அதில் ஒருபகுதியாக, ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்குக்கான தேர்தலோடு சேர்த்து 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று (மே 13) ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.

விஜயவாடாவில் உள்ள பசுமை வாக்குச் சாவடியில் ஆளுநர் நசீர் மற்றும் அவரது மனைவி சமீரா நசீர் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதேபோல, கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்துலா தொகுதியில் உள்ள பாகரபுரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும்; அமராவதியில் சந்திரபாபு நாயுடுவும், அவரது மனைவியும்; மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் மங்களகிரியிலும் வாக்களித்தனர்.

இந்த நிலையில், பல்நாடு மாவட்டத்தில் உள்ள மச்செர்லா மண்டலத்தில் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சியின் பெண் ஆதரவாளர் ஒருவரின் நெற்றியில் பெரிய வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக பல்நாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ் கரிகாபதி தெரிவித்துள்ளார். மேலும், சுமார் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஒரு தேர்தல் முகவரைத் தாக்கியதாகவும், இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடப்பா காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கவுஷல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "ஜனநாயகத்தில் வாக்கு ஒரு ஆயுதம், இது வாக்காளர்கள், சமூகம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை சரியாக அமைக்கும். ஒட்டுமொத்த மாநிலத்திடமும் நான் ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன். வாக்கு உங்கள் உரிமை, அது உங்கள் வாழ்க்கையை மாற்றும்.

மேலும், வருங்கால சந்ததியினருக்கும் அடித்தளம் அமைக்கும். அனைவரும் முன்வர வேண்டும். பொறுப்பு மற்றும் அவர்களின் உரிமையைப் பயன்படுத்துங்கள் மற்றும் வரவிருக்கும் நல்லாட்சியை அறிவிக்க உங்கள் உள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தெலங்கானா தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு? - எந்த தொகுதியில் அதிகம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.