ETV Bharat / bharat

விரைவு சாலையில் பறந்து விழும் கார்கள்.. ஒப்பந்ததாரருக்கு ரூ.50 லட்சம் அபராதம்.. டெல்லியில் ஷாக்! - Delhi Contractor Fined

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 4:31 PM IST

டெல்லி விரைவு சாலையில் உள்ள குறையை சீரமைக்காமல் கவனக்குறைவோடு இருந்த ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலை அமைச்சகம் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன்ஷாட் (credit - Instagram/PlusDrive_155)

டெல்லி: மனிதர்களின் அன்றாட வாழ்க்கை சாலை போக்குவரத்தை நம்பியே உள்ளது. அந்த சாலையை அரசாங்கம் சரிவர பராமரிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய பள்ளம் கூட பெரிய விபத்தை ஏற்படுத்தி உயிர்ச்சேதம் வரை நடக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சாலைகளில் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம். ஆனால், அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறிய ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, சம்பந்தப்பட்ட பொறியாளரை பணிநீக்கம் செய்துள்ளது.

டெல்லி - வதோதரா விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருக்கும் கார்கள் திடீரென காற்றில் பறந்து பின்னர் மீண்டும் சாலையில் விழும் வீடியோ ஒன்று அண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது.

அந்த வீடியோவில் பார்க்கும்போது, சாலையானது சமமாக இருப்பதைப் போலவே இருந்தாலும், குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் கார்கள் வேகத்தடையில் மோதி வந்த வேகத்தில் பறப்பதைப் போல உள்ளது. இந்நிலையில், பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ குறித்து விசாரித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இது!.."ஒரு டீயின் விலை 340 ரூபாயா?" - ப.சிதம்பரம் ட்வீட்!

அதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த மாதம் எடுக்கப்பட்ட அந்த வீடியோ கடந்த 10ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது உறுதி ஆகியுள்ளது. உடனே இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட காண்டிராக்டருக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, பொறியாளர் பணியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள இடம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், பின்னர் அந்த இடம் நிரந்தரமாக சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி - வதோதரா விரைவுச் சாலையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள பிரச்சினைக்கான காரணத்தையம், அதை சரி செய்வதற்கான வழிகாட்டலையும் கண்டறிய காரக்பூர் ஐஐடி பேராசிரியர் கே.எஸ்.ரெட்டி மற்றும் காந்திநகர் ஐஐடி பேராசிரியர் ஜி.வி.ராவ் ஆகியோர் அடங்கிய கள நிபுணர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.