ETV Bharat / bharat

இஸ்ரேலில் பணிபுரிய 5 ஆயிரம் உத்தரபிரதேச தொழிலாளர்கள் தேர்வு! - இந்தியா இஸ்ரேல் ஒப்பந்தம்

இஸ்ரேலில் பணிபுரிவதற்கு உத்தரபிரதேசத்தில் இருந்து 5 ஆயிரத்து 20 தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Workers from Uttar Pradesh have been selected to work in Israel
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிய தேர்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 10:29 AM IST

உத்தரபிரதேசம்: கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் பணிபுரிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சீரமைப்பு பணிகளிலும், பராமரிப்பு பணிகளிலும் ஏற்பட்ட இடையூறுகளை நீக்க புதிய தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வரப்பட்டது. அந்தவகையில் இஸ்ரேல் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களை இஸ்ரேல் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் உத்தரபிரதேசம், ஹரியான மாநிலங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் தொழிலாளர்களாக பணிபுரிய உத்தரபிரதேசத்தில் 7 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஐஐடி அலிகஞ்சில் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஒருவாரமாக இஸ்ரேலிய அரசாங்க குழுவுடன் இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு ஆணையமும் (NSDC) ஈடுபட்டிருந்தது.

இந்த தேர்வில் பிளாஸ்டிரிங் மற்றும் டைல்ஸ் ஒட்டும் பணிக்குத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 7 ஆயிரத்து 94 பேர் இஸ்ரேலில் பணிபுரிவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 5 ஆயிரத்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். திறன்மிகு தொழிலாளர்களைத் தேர்வு செய்யும் பணியை உத்தரபிரதேசத்தின் தொழிலாளர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை சிறப்பு செயலாளர் குணால் சில்கு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து குணால் சில்கு கூறுகையில், “முதலமைச்சரின் வழிகாட்டுதலில் பேரில் இந்த தொழிலாளர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேற்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்திய அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து ஐஐடி அலிகஞ்ச் முதல்வர் ராஜ் குமார் யாதவ் கூறுகையில், “தொழிலாளர்களின் திறன் குறித்த இந்த சோதனையானது ஐஐடி அலிகஞ்சில் ஜனவரி 23 முதல் ஜனவரி 30 வரை நடைபெற்றது.

மாதம் ரூ.1.37 லட்சம் ஊதியம் வழங்கக்கூடிய இந்த வேலைவாய்ப்பிற்கான திறன் வாய்ந்த தொழிலாளர்களைத் தேர்வு செய்யும் பணி இஸ்ரேலிய குழுவின் மேற்பார்வையில் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு ஐஐடி அலிகஞ்ச் எடுத்த முயற்சிகளை அவர்கள் பாராட்டினார்கள். எதிர்காலத்தில் எங்களுக்கு திறன் வாய்ந்த தொழிலாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் லக்னோ, ஐஐடி அலிகஞ்சை தேர்வு மையமாக மாற்றுவோம் என அவர்கள் தெரிவித்தனர்” என ராஜ்குமார் யாதவ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச்சண்டை.. பாதுகாப்பு படையினர் 3 பேர் பலி 14 பேர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.