ETV Bharat / bharat

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்? இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை! - IND vs USA T20 World Cup - IND VS USA T20 WORLD CUP

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Etv Bharat
India Team Players (IANS Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 3:22 PM IST

Updated : Jun 12, 2024, 3:44 PM IST

நியூ யார்க்: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (ஜூன்.12) நியூ யார்க்கில் உள்ள நாசாவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு உலக கோப்பை சீசனில் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் குருப் பிரிவில் முறையே முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. இதில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி முதல் இடத்தையும் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும். மோனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்கா அணியை பொறுத்தவரை, கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா முத்திரை பதித்தது.

அதற்கு முன்னதாக கனடா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அமெரிக்கா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணியை பொறுத்தவரை அயர்லாந்து மற்றும் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 119 ரன்கள் என்ற குறைந்த இலக்கை நிர்ணயித்த போதிலும் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக செயல்பட்டு பாகிஸ்தான் வீரர்களை கட்டுப்படுத்தி அணிக்கு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித் தந்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கக் கூடிய அமெரிக்கா மைதானங்களில் நியூ யார்க் ஸ்டேடியம் விதிவிலக்காக காணப்படுகிறது. நியூ யார்க் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் அயர்லாந்து அணிக்கு எதிராக கனடா 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்ததே. அதேநேரம் குறைந்தபட்ச ஸ்கோர் என்று கணக்கிட்டால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்களில் இலங்கை அணி வீழ்ந்தது தான்.

பந்துவீச்சுக்கு சாதகமாக காணப்படும் நியூ யார்க் மைதானத்தில் இந்திய வீரர்கள் முத்திரை பதிப்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தியா - அமெரிக்கா இடையிலான லீக் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதையும் படிங்க: கட்டுக்கோப்பாகப் பந்து வீசிய கனடா.. முதல் வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான்! - T20 World Cup

Last Updated : Jun 12, 2024, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.