ETV Bharat / bharat

வடக்கில் இரண்டு.. தெற்கில் ஒன்று.. தாமரை மலராத மாநிலங்கள்! - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election 2024: கடந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை பெரும்பான்மை இன்றி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. அதேநேரம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Credits  - ETV Bharat Tamil Nadu, Stalin, Rahul Xpage
ஸ்டாலின், மோடி, ராகுல் காந்தி (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 10:53 PM IST

சென்னை: 17வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக் கட்சி, விசிக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களம் கண்டன. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் 303 இடங்களில் வெற்றி என பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்த பாஜக இந்த தேர்தலிலும் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், தருமபுரி தொகுதியில் பாஜக சார்பில் களம் கண்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில், 1 மணிக்குப் பிறகு தொடர் சரிவைச் சந்தித்தார். இதன் காரணமாக பாஜக பெற்றி பெறாத மாநிலமாக தமிழகம் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல், 13 தொகுதிகளை கொண்டுள்ள பஞ்சாப் மாநிலத்திலும், 2 தொகுதிகளைக் கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்திலும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராதிகா சரத்குமார் முதல் ராமர் கதாபாத்திர நடிகர் வரை.. 2024 மக்களவைத் தேர்தலில் கவனம் ஈர்த்த திரைப்பிரபலங்கள்! - CELEBRITIES IN LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.