பெகுசராய்: மக்களவை தேர்தலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பீகாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில், பெகுசராய் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ஷா ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். தரையில் இருந்து எழுப்பிய ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
பலத்த காற்று காரணமாக நிலை தடுமாறிய ஹெலிகாப்டரை, மீண்டும் கட்டுக்குள் கொண்டுஇ வந்த விமானி தொடர்ந்து வானை நோக்கி செலுத்தினார். சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், பின்னர் சீராக இயங்கியதால், அதிர்ஷ்டவசமாக அமித் ஷா உயிர் தப்பினார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது காற்று காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே அமித் ஷா பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் நிலை தடுமாறிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பீகாரில் மொத்தம் 17 மக்களவை தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் களம் காணுகிறது.
சிராக் பஸ்வானின் எல்ஜேபி மற்றும் ஜிதன் ராமின் இந்துஸ்தான் அவம் மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சிகள் முறையே 5 மற்றும் 1 இடத்தில் களம் காணுகின்றன.
இதையும் படிங்க : கிறிஸ்தவ மிஷனரி குறித்து அவதூறு கருத்து: அண்ணாமலை மீதான வழக்கு விசாரணை தடை நீடிப்பு - உச்ச நீதிமன்றம்! - Annamalai Hate Speech Case