ETV Bharat / bharat

ஆட்சி அமைப்பது யார்? பாஜக, இந்தியா கூட்டணி தீவிர ஆலோசனை! - Lok sabha Election result 2024

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதேநேரம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 10:12 AM IST

டெல்லி: 18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டஙக்ளாக நடைபெற்றன. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 232 இடங்களையும் கைப்பற்றின.

மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவுக்கு போதுமான இடங்கள் உள்ள போதிலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த தேவையான தொகுதிகளை வெல்ல பாஜக தவறிவிட்டது. இதனால் ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம், மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையே பாஜக பெரிதும் நம்பியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு தொடங்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து 7 லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாலை 6 மணிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் வைத்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மத்தியில் ஆட்சி அமைப்பது, கூட்டணியில் புதிதாக கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வறு முக்கிய முடிவுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், சுப்ரியா சுலே ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

இதையும் படிங்க: வடக்கில் இரண்டு.. தெற்கில் ஒன்று.. தாமரை மலராத மாநிலங்கள்! - Lok Sabha Election Results 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.