ETV Bharat / bharat

பேருக்குதான் நடுநிலைப் பள்ளி; ஆனா ரெண்டே வகுப்பறைதான்! இடுகாட்டில் அமர்ந்து பாடம் படிக்கும் பீகார் மாணவர்கள் - Bihar Govt School

பீகாரில் அரசுப் பள்ளி ஒன்றில் போதிய வகுப்பறைகள் இல்லாததன் காரணமாக, இடுகாட்டு வளாகத்தில் அமர்ந்து பாடங்கள் படிக்க வேண்டிய அவலநிலைக்கு அப்பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பீகாரில் மதுபானி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி
பீகாரில் மதுபானி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி (Image Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 7:41 PM IST

மதுபானி (பீகார்): பீகாரில் அரசுப் பள்ளி ஒன்றில் போதிய வகுப்பறைகள் இல்லாததன் காரணமாக, இடுகாட்டு வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் பாடங்கள் படிக்கும் கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பீகார் மாநிலம், மதுபானி மாவட்டத்துட்பட்ட ஹர்னா ஊராட்சியில் இயங்கி வருகிறது உருது அரசு நடுநிலைப் பள்ளி. கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு முன்புவரை தொடக்கப் பள்ளியாக இருந்த வந்த இப்பள்ளி, 2006 இல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி தரம் உயர்த்தப்பட்டாலும், பல ஆண்டுகளாக வெறும் இரண்டே இரண்டு வகுப்பறைகளில் தான் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, கடந்த 2014 - 15 ஆம் நிதியாண்டில் இப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக ஏழு லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கியிருந்ததாகவும், ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாகபுதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்த முடியாமல் போனது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, ஒரு காலத்தில் 400 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது இப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 295 ஆக உள்ளது. இவர்களுடன் ஒன்பது ஆசிரியர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், இப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடுமையான ஒரு நெருக்கடியை தினந்தோறும் சந்தித்து வருகின்றனர்.

போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தால், பள்ளிக்கு அருகே அமைந்துள்ள இடுகாட்டு வளாகத்தில் அமர்ந்து பள்ளிப் பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் ஆளாகி உள்ளனர். நாள்தோறும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்துவரும் இக்கொடுமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஈடிவி பாரத் செய்தியாளர் குழு இப்பள்ளிக்கு நேரில் சென்று பார்த்தபோது, சில மாணவர்கள் இடுகாட்டில் கல்லறைகளுக்கு அருகே அமர்ந்து பயின்று கொண்டிருந்ததை காண முடிந்தது. இன்னும் சில மாணவர்கள் கல்லறைக்கு அருகிலேயே அமர்ந்து மதிய உணவு உண்பதையும் பார்க்க முடிந்தது. இன்னும் சில மாணவர்கள் தெரு ஒரங்களிலும், மசூதி நுழைவாயிலும் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தனர்.

"பள்ளியில் உள்ள இரண்டு அறைகளில் ஒன்று மதிய உணவு தயாரிக்கவும், அதற்கான பொருட்களை வைத்து கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள இடத்தை மாணவர்களும் , ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர்" என்கிறார் தலைமை ஆசிரியர் ஜகன்நாத் பாஸ்வான் பரிதாபமாக.

அரசு நிலம் ஒதுக்காததால், மசூதிக்கு சொந்தமான இடத்தில் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது என்கிறார் முகமது இஸ்ரேல் எனும் ஆசிரியர். இன்னும் சில நாட்களில் இடுகாட்டு வளாகத்தில் தடுப்புவேலி அமைக்கப்பட உள்ளது என்கிறார் இப்பள்ளியின் மற்றொரு ஆசிரியர் சஃபிகுர் ரகுமான்.

இதையும் படிங்க: 'அனில் அம்பானி இனிமே ஷேர் மார்க்கெட் பக்கம் போகவே கூடாது'; செபியின் அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.