ETV Bharat / bharat

மது விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை - நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு! - NAGARATHNA IN DISSENTING JUDGEMENT

தொழில்துறை மது உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான திறன் மாநிலங்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தீர்ப்பு தொடர்பான கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)
author img

By PTI

Published : Oct 24, 2024, 10:17 AM IST

Updated : Oct 24, 2024, 11:50 AM IST

டெல்லி: தொழில்துறை ஆல்கஹால் மீது வரி விதிக்கலாம் மற்றும் ஒழுங்குபடுத்தலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு (8:1) பெரும்பான்மையான தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி பி.வி.நாகரத்னா, தொழில்துறை மது உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

தொழில்துறை மது உற்பத்தியில் மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இருப்பதாக கடந்த 1990ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரப் பிரதேசம் உட்பட பல மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா, மனோஜ் மிஸ்ரா உள்ளிட்ட 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதில், நீதிபதி பி.வி.நாகரத்னா தவிர மற்ற 8 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 8வது பதிவில் குறிப்பிட்டுள்ள "போதை மது" என்ற சொல் தொழில்துறை மதுவின் வரம்பிற்குள் வரும். ஆகையால், தொழில்துறை ஆல்கஹால் உற்பத்திக்கும், விநியோகத்தை முறைப்படுத்த சட்ட இயற்றுவதற்கும் மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க: பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை.. பிரிக்ஸ் மாநாட்டில் கர்ஜித்த மோடி!

பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக நீதிபதி பி.வி.நாகரத்னா 241 பக்கம் கொண்ட தீர்ப்பை எழுதியுள்ளார். அதில், அரசியலமைப்புச் சட்டத்தின் பட்டியல் 1இன் 52வது பதிவில் மற்றும் மாநிலத் தகுதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிடுவதன் மூலம், முழு தொழில் துறையையும் நாடாளுமன்றம் ஆக்கிரமிக்க முடியும் என்றார்.

'தொழில்துறை ஆல்கஹால்' ஆனது ஒரு செயல்முறையின் மூலம் பானமாக மாற்றப்படுவதால், அது மாநில சட்டமன்றத்திற்கு வரி விதிக்கவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ உரிமை இல்லை. போதை பானமாக மாற்றப்படும் மதுவானது, தொழில்துறை ஆல்கஹால் வகையினில் உள்ளடங்கும். எனவே, இது தொழில்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (IDRA) பிரிவு 18G கீழ் இது தொடர்புடையது. அத்துடன், நொதித்தல் தொழில்கள் தொடர்பான அனைத்துக்கும் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் மட்டுமே தகுதியுடையது.

அரசமைப்புச் சட்டம் பட்டியல் I, 52வது பதிவில் மாநில சட்டமன்றத்தின் தகுதியின் கீழ், தொழில்துறை ஆல்கஹால் போன்ற 'ஃபெர்மென்டேஷன் இண்டஸ்ட்ரீஸ்' உற்பத்தி, வழங்கல், விநியோகம், வர்த்தகம் ஆகிய விவகாரங்களில் சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு உட்பட்டது'' என நீதிபதி பி.வி.நாகரத்னாவின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 24, 2024, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.