ETV Bharat / bharat

ராமோஜி ராவ்-க்கு பாரதா ரத்னா விருது வழங்க வேண்டும் - இயக்குநர் ராஜமௌலி வலியுறுத்தல்! - Ramoji Rao death - RAMOJI RAO DEATH

Ramoji Rao: ஹைதராபாத்தில் காலமான மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

file pic of  Ramoji Rao - ss rajamouli
file pic of Ramoji Rao - ss rajamouli (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 5:25 PM IST

ஹைதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (87), உடல் நலக்குறைவால் இன்று (ஜூன் 8) அதிகாலை காலமானார். அவரது உடல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாரதா ரத்னா: ராமோஜி ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும், சினிமாப் பிரபலங்களும், ஊடகத் துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ராமோஜி ராவுக்கு பாரதா ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில், “ராமோஜி ராவ் தனது 50 ஆண்டுகால விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் நம்பிக்கையை அளித்துள்ளார். அவருக்கு நாம் மரியாதை செலுத்துவதற்கான ஒரே வழி அவருக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்குவதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

ராமோஜி ஃபிலிம் சிட்டி: மறைந்த ராமோஜி ராவ் அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்கள் மட்டுமின்றி, தயாரிப்பாளராக திரையுலகிலும் பெரும் பங்காற்றியவர். ஹைதராபாத்தில் அமைந்துள்ள அவரது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பாகுபலி உள்ளிட்ட பல பிரமாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், தெலுங்கு திரையுலகமே ராமோஜியின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்: முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ''ராமோஜி ராவ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. தொலைநோக்கு பார்வையாளராக இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியவர். அவரது பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் உலகத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது முயற்சிகள் மூலம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரத்தை அமைத்தார்'' என கூறியுள்ளார்.

அதேபோல, நடிகர் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், ராம் கோபால் வர்மா, விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு போன்ற பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ராம் கோபால் வர்மா: பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “ராமோஜி ராவின் மரணம் நம்பமுடியாதது. அவர் ஒரு தனிநபரிலிருந்து பெரிய நிறுவனமாக மாறியவர். அவர் இல்லமால் ஆந்திர மாநிலங்கள் ஒரே மாதிரியாக இருந்திருக்காது. ராமோஜி என்பவர் ஒரு மனிதர் கிடையாது, அவர் ஒரு சக்தி. அந்த சக்தியின் மரணத்தை கற்பனை செய்வது கடினம்'' என குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ராமோஜி ராவ், தொடக்கத்தில் மாத பத்திரிகையை துவங்கி கடுமையான உழைப்பின் காரணமாக நாளடைவில் தனது ஊடக நெட்வொர்க்கை விரிவுபடுத்தினார். மேலும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது அவர் ராமோஜி ஃபிலிம் சிட்டி, ஈநாடு நாளிதழ், ஈடிவி நெட்வொர்க், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான உஷா கிரண் மூவீஸ் மற்றும் திரைப்பட விநியோகப் பிரிவு மயூரி ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஆகியவற்றைக் கொண்ட ராமோஜி குழுமத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: LIVE: ராமோஜி ராவ் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி நேரலை - RAMOJI RAO TRIBUTE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.