ஹைதராபாத்: மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு முதல் தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்ற மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன், 2021 பிப்ரவரி மாதம் முதல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், திடீரென ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தென்சென்னை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய தொகுதியில் ஏதேனும் ஒன்றில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.