ETV Bharat / bharat

மாநிலங்களவை உறுப்பினரானார் சோனியா காந்தி! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் பதவியேற்பு! - Sonia gandh - SONIA GANDH

மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். ஏறத்தாழ 25 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 7:41 PM IST

டெல்லி : 25 ஆண்டுகளுக்கு பின் மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி பதவியேற்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக் காலம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியிட்டார்.

இதையடுத்து இன்று (ஏப்.4) மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் காந்தி குடும்பத்தில் இருந்து மாநிலங்களவைக்கு செல்லும் இரண்டாவது நபர் சோனியா காந்தி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.

துணை குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் இந்தி மொழியில் மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஏறத்தாழ 5 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு உள்ள சோனியா காந்தி அதில் ஒருமுறை கூட தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக 1999 ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2004ஆம் ஆண்டு ரேபரலி தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் தொடர்ந்து அங்கிருந்து போட்டியிட்டு மக்களவைக்கு சோனியா காந்தி தேர்வாகி வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சோனியா காந்தியுடன் சேர்த்து மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க : உபா, பணமோசடி தடுப்பு சட்டங்கள் ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு! - CPIM Lok Sabha Poll Manifesto

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.