ஹசன்: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்சியும், பாலியல் வீடியோ வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதருமான சுரஜ் ரேவண்ணா மீது அதே கட்சியை சேர்ந்த இளைஞர் தன்பாலின சேர்க்கை புகார் அளித்து உள்ளார். அரகலகூடு டவுன் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் அளித்த புகாரில் சுரஜ் ரேவண்ணா, கடந்த ஜூன் 16ஆம் தேதி கன்னிகாடா பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து தன்பாலின ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகார் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக இளைஞர் அளித்த புகாரில் ஹோலேநரசிபுரா போலீசார் சுரஜ் ரேவண்னா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சுரஜ் ரேவண்ணாவிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை கைது செய்து சிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்மந்தமாக சுரஜ் ரேவண்ணா மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தன் மீது பொய்யான வழக்கு ஜோடிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசாரின் விசாரணையில் விரைவில் உண்மை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன் மீது குற்றம் சுமத்துவதற்காக திட்டமிட்ட அரசியல் சதி என்றும், அதை தன்னால் ஒரு போது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுரஜ் ரேவண்னா தெரிவித்துள்ளார்.
சட்டத்தை முழுமையாக நம்புவதாகவும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவு விரைவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் சுரஜ் ரேவண்ணா கூறியுள்ளார். இதனிடையே, புகார் அளித்த இளைஞர் மீது சுரஜ் ரேவண்ணாவின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சிவகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், சுரஜ் ரேவண்ணாவிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு புகார் அளித்த இளைஞர் மிரட்டியதாகவும், பின்னர் அதை 2 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டதாகவும், பணம் தராவிட்டால் சுரஜ் மீது போலியான புகார் அளிப்பதாக மிரட்டியததாக்வும் சிவகுமார் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர். தன்பாலின சேர்க்கை புகாரில் கைது செய்யப்பட்டு உள்ள சுரஜ் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரண் ஆவார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நியமன உறுப்பினராக இருந்து வருகிறார்.
அண்மையில் பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சிஐடி குழுவை நியமித்தது. மேலும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா கடந்த சில நாட்களுக்கு முன் ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பினார். அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு முறைகேடு: சிபிஐ வழக்குப்பதிவு! எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன? - NEET UG Paper Leak Case To CBI