ETV Bharat / bharat

9 பக்தர்கள் உயிரை குடித்த டி.ஜே. வாகனம்.. பீகாரில் நிகழ்ந்த சோகம்! - Bihar Kanwariyas dead - BIHAR KANWARIYAS DEAD

Bihar Kanwariyas dead: பீகார் மாநிலம் வைஷாலி அருகே சிவ பக்தர்கள் யாத்திரை சென்ற வாகனம் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் 9 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின் கம்பியில் உரசிய டி.ஜே. வாகனம்
மின் கம்பியில் உரசிய டி.ஜே. வாகனம் (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 7:52 AM IST

வைஷாலி: பீகார் மாநிலம் வைஷாலி பகுதியில் கன்வார் யாத்திரையின் போது பக்தி பாடல்கள் ஒலிக்கப்படும் டி.ஜே. வாகனம் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் 9 கன்வாரியாக்கள்( சிவ பக்தர்கள்) உயிரிழந்தனர். இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஹாஜிபூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சோன்பூர் பாபா ஹைஹர்நாத் பகுதியில் வழிபாடு செய்வதற்காக ஷரனில் உள்ள பஹேலாஜா காட் பகுதியை நோக்கி கங்கை நீரை எடுத்துச் சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தங்க பிஸ்கட் கேள்விப்பட்டிருப்பீங்க; வெள்ளி பிஸ்கட் கடத்தலை கேள்விப்பட்டிருக்கீங்களா? ராஜஸ்தானில் சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.