ETV Bharat / bharat

விழுந்து மடிந்த பெண்கள்.. பீகார் சித்தநாத் கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி..! - Bihar Jehanabad stampede - BIHAR JEHANABAD STAMPEDE

Stampede at Baba Siddhnath Temple: பீகார் மாநிலத்தின் பாபா சித்தநாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.

பீகார் சித்தநாத் கோயில் கூட்ட நெரிசல் மரணம்
பீகார் சித்தநாத் கோயில் கூட்ட நெரிசல் மரணம் (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 11:33 AM IST

ஜெகனாபாத்: பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபா சித்தநாத் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஜலாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண நேற்றிரவு ஏராளமான சிவ பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை என்பதால் இன்று அதிகாலை கவுகாட் வழியாக பாபா சித்நாத்தை தரிசனம் செய்வதற்காக கோயில் அமைந்துள்ள மலைப் பகுதியை கூட்டம் கூட்டமாக மக்கள் நெருங்கினர்.

அப்போது பக்தர்களுக்கிடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்குமிங்குமாக ஓட தொடங்கினர். இந்த நெரிசலில் இதுவரை 7 பேர் இறந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இறந்தவர்களில் நான்கு பேர் கயா மாவட்டத்தில் உள்ள மோர் டெக்ரியைச் சேர்ந்த பூனம் தேவி, மக்தும்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள லடோவா கிராமத்தைச் சேர்ந்த நிஷா குமாரி, ஜல் பிகாவில் உள்ள நாடோலைச் சேர்ந்த சுசீலா தேவி மற்றும் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள எர்கி கிராமத்தைச் சேர்ந்த நிஷா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், சாமி தரிசனத்துக்கு சென்றவர்களிடையே திடீரென குழப்பம் ஏற்பட்டது. அப்போது திடீரென மக்கள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர்.

இதில். சில பெண்கள் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்தனர். அதே நேரத்தில் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். தற்போது, அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவித்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருத்தணி அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.