ETV Bharat / bharat

சுதந்திர தின விழாவிலும் அரசியல் செஞ்சா எப்படி? - மத்திய பாஜக அரசை சாடிய காங்கிரஸ்! - independence day Function delhi

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு ஐந்தாவது வரிசையில் அமர இடம் ஒதுக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி -கோப்புப்படம்
ராகுல் காந்தி -கோப்புப்படம் (credits -ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 8:05 PM IST

டெல்லி: நாடு முழுவதும் 78 சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். இந்த விழாவில் பங்கேற்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் அமர இடம் ஒதுக்காமல், ஐந்தாவது வரிசைியில் இடம் ஒதுக்கிய விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால் தான் ராகுலுக்கு அங்கு இடம் அளி்க்க இயலவில்லை என்ற மத்தி பாதுகாப்பு அமைச்சகத்தின் விளக்கத்தை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. இது விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறியுள்ள காங்கிரஸ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, இன்றைய விழாவில் பங்கேற்காத போதிலும், அவருக்கும் ஐந்தாவது வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளது.

" பாதுகாப்பு அமைச்சகம் ஏன் இப்படி அற்பமாக நடந்து கொண்டுள்ளது என தெரியவில்லை? என்று ஈடிவி பாரத்திடம் கூறியுள்ள மாநிலங்களை எம்.பி.யும், மூத்த வழக்குரைஞருமான விவேக் தன்ஹா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவியை விட உயர்ந்தது. பிரதமருக்கு அடுத்த நிலையில இருக்கும் அவருக்கு (ராகுல்) ஐந்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை பாதுகாப்பு அமைச்சகம் எப்படி நியாயப்படுத்துகிறது எனத் தெரியவில்லை? என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு தேசிய விழாவை அரசியலாக்குவதற்கு தமது அமைச்சகத்தை அவர் அனுமதித்திருக்க கூடாது" என்றும் விவேக் தன்ஹா ஆதங்கத்துடன் கூறினார்.

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; நடிகைகள் சமந்தா, ஆலியா பட் கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.