ETV Bharat / bharat

மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன ஊழல் விவகாரம்: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை - உச்ச நீதிமன்றம்! - West Bengal teacher job scam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 7:34 PM IST

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

டெல்லி: மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிய கடந்த 2016ஆம் ஆண்டு 25 ஆயிரத்து 753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட 25 ஆயிரத்து 753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என்று கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது சிபிஐ விசாரித்து வரும் 8 ஆயிரம் ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு படி 12 சதவீத வட்டியுடன் சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடரும், ஆனால் பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சந்திரசூட், ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது மாநில அரசு ஏன் கூடுதல் பதவிகளை உருவாக்கி, காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களை நியமித்தது என கேள்வியெழுப்பினார். அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், அனைத்து ஆசிரியர் நியமனங்களும் சட்ட விரோதமானவை என்பது சிபிஐ வழக்கு கூட அல்ல.

ஆசிரியர் - மாணவர் விகிதமே இத்தகைய நியமனத்துக்கு காரணம் என்றார். அதைத் தொடர்ந்து நீதிபதி, ஓஎம்ஆர் தாள்கள் மற்றும் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் அழிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். மேலும், இதுபோன்ற முக்கியமான விஷயத்துக்கு ஏன் டெண்டர் விடவில்லை? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நீதிபதி இது முறையாக நடந்த மோசடி என்றும் பொது வேலைகள் இன்று மிகவும் பற்றாக்குறையாக உள்ளன, மேலும் அவை சமூக இயக்கத்துக்காக பார்க்கப்படுகின்றன என்றார். நியமனங்கள் மோசடியானதாக இருந்தால் அமைப்பில் என்ன இருக்கும்? மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள் என்றும் இதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: இமாச்சல பிரதேச மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.