கர்நாடகா: மனையியல் (Home Science) விரிவுரையாளர்கள் நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டு 18 விரிவுரையாளர்களை நியமித்தது கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம். மனையியல் பிரிவுப்பாடங்களில் தேர்ச்சிப் பெற்றதால் விதிகளின் படி அவர்கள் அனைவரும் இளங்கலை பட்டப்படிப்பு விரிவுரையாளராக தகுதியற்றவர்கள் என்று தீர்மானித்து அவர்களின் நியமனங்களை ரத்து செய்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். இந்த உத்தரவினை எதிர்த்து முன்னதாக நியமிக்கப்பட்ட 18 விரிவுரையாளர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பி.எஸ். நரசிம்மா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று (பிப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனையியல் யூஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு. அதனால் இந்தப் பாடத்தில் ஒருவர் விரிவுரையாளராக சேருவதற்கு இளங்கலை மனையியல் பட்டப்படிப்பில் உள்ள ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தாலே தகுதியுடையதாகக் கருதப்படுகிறது.
இளங்கலை பட்டப்படிப்பிற்கு யூஜிசியால் நிர்ணயிக்கப்பட்ட மனையியல் பாடம் தான் தகுதியுடையது. மேலும் குறிப்பிட வேண்டுமானால், கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேசிய தகுதி தேர்வில் மனையியல் பட்டப்படிப்புக்கென எண் 12 என்று தனிக் குறியீடு வெளியிடப்பட்டு, மற்றப் பாடங்களைப் போல் மனையியலும் தனி ஒரு பாடமாக யூஜிசியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனையியல் என்பது ஒரே பாடங்களின் வெவ்வேறு தனிப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக அதனுள் இணைத்துள்ளது.
குறிப்பாக மனையியல் பட்டப்படிப்புகளைப் பொறுத்தவரையில் இளங்கலை மாணவர்களுக்கான விரிவுரையாளர்கள் தேர்ச்சி எனப் பார்க்கையில் முதுநிலை பட்டப்படிப்பே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீண்டும் சொல்லப் போனால், இளங்கலை மாணவர்களுக்கான விரிவுரையாளரின் கல்வித்தகுதி மனையியல் பாடங்களில் முதுநிலை பட்டமே. அது மனையியலின் எந்த பிரிவு சார்ந்ததாகவும் இருக்கலாம்.
இளங்கலை பட்டப்படிப்பிற்கான தேர்ச்சிக்கு மனையியல் ஒரு பாடமே இல்லை, என்றும் அது வெறும் ஒரு பாடத்தில் இருக்கும் பரிவு அல்லது பகுதி என்ற உயர்நீதிமன்றத்தின் அனுமானத்திற்கு எந்த பயன்பாடும் இல்லை. முன்னதாக முதல்நிலை வகிக்கும் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் ஒரே கேடராகக் கருதப்பட்டே, மனையியல் துறைகளுக்கான ஆள்சேர்ப்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி விதிகள் பின்பற்றப்பட வேண்டுமானால், அது மொத்த பாடங்கள் அதாவது வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல் என்ற அனைத்து பாடங்களின் வரையறைகளில் மாற்றங்கள் வகுக்கும். உதாரணத்திற்கு, வரலாற்றை எடுத்துக்கொண்டால் அதன் முதுநிலை படிப்பில் பண்டைய வரலாறு, தொல்லியல், கல்வெட்டு, உலக வரலாறு, நவீன கால இந்திய வரலாறு, ஐரோப்பிய வரலாறு, தென்கிழக்கு ஆசிய மற்றும் மேற்காசிய வரலாறு என அதற்கென்று வெவ்வேறு தனிப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வரலாறு குறித்து வெவ்வேறு தனிப்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக அதனுள் இணைப்பது தான் வரலாறு. நிர்ணயிக்கப்படும் விதிகள் பாடம் வாரியாக அதன் தனிச்சிறப்பை பரிந்துரைக்கவில்லை என்றால், அதனை ஆராய்வதற்கு உயர்நீதிமன்றத்திற்கு எந்த நியாமும் இல்லை.
விதிகள் என்ன கூறுகிறது என்பதை உணராமலும் மற்றும் வெளியிடப்படும் விளம்பரங்கள் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா? என்பதனை ஆலோசிக்க மறந்தும், நீதித்துறையின் மறுஆய்வு குறித்த விதிகளுக்குள் உட்படாமல் இருந்ததாலே உயர்நீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதனால், 2007ஆம் ஆண்டு முதல் கர்நாடக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்படும் நியமனங்கள் செல்லுபடியாகும்" என்று உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து 18 விரிவுரையாளர்களின் நியமனம் செல்லுபடியாகும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படிங்க: ஆழ்கடலை ஆராயப்போகும் சமுத்ரயான்: சந்திரயான் , ககன்யான் வரிசையில் அடுத்த முயற்சி