டெல்லி: கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது ஓ.பன்னீர் செல்வம் ரூ. 1.77 கோடி அளவிற்குச் சொத்துக்கள் குவித்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் தமிழக அரசுத் தரப்பில் வழக்கு தொடர்வதற்கான அனுமதி திரும்பப்பெற்றது. இந் உத்தரவை ஏற்று ஓ.பன்னீர் செல்வத்தை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசன் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் முன்னாள் அமைச்சர் வளர்மதி விவகாரத்திலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த வழக்கில் பொருந்தும் என தெரிவித்தார். அப்போது அதனை ஏற்க மறுத்து நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் வளர்மதி விவகாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் எப்படிப் பொருந்தும்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப்பெற அனுமதி அளித்து வழக்கு விசாரணையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கடலூர் எம்பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் மீதான கொலை வழக்கு; விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவு!