டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மனுத்தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் முதலமைச்சர் தலைமையிலான அணியினரே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார். இந்த நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பை எதிர்த்து சரத் பவார் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இதன்படி, இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு விசாரணைக்கு வைக்கப்பட்டது. அப்போது, மகாராஷ்டிரா சட்டசபையின் காலம் கருதி இதனை அவசரமாக விசாரிக்க சரத் பவார் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கோரினார். ஏனென்றால், மகாராஷ்டிரா சட்டசபை இந்த ஆண்டு நவம்பர் உடன் முடிவடைய உள்ளது.
அதேபோல், இது தொடர்பாக ஜெயந்த் படில் மற்றும் ஜிதேந்திர அவ்ஹத் ஆகிய சரத் பவார் தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்குப் பிறகு, அதேபோன்ற உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்த மனு மீதும் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தும்.
இந்த நிலையில், சரத் பவார் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது அஜித் பவார் மற்றும் அவரது 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசியவாத காங்கிரஸ் யாருக்கு சொந்தம்? சரத் பவாரின் அடுத்த நகர்வு என்ன? உச்ச நீதிமன்றம் விசாரணை!