ETV Bharat / bharat

காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதி பங்கீடு இறுதி! எத்தனை இடங்களில் காங்கிரஸ் போட்டி தெரியுமா? - ராகுல் காந்தி

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளிடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கியதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 5:18 PM IST

Updated : Feb 22, 2024, 12:12 PM IST

மொரதாபாத் : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்து உள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்களிடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில். ஒருவழியாக இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களை சமாஜ்வாதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு மிக நெருக்கமான அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளையும் சேர்த்து 17 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்தி ஸ்மிரிதி ராணி மத்திய அமைச்சரானார். இந்த முறையும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே பாலமாக செயல்பட்டு 17 தொகுதிகளை ஒதுக்க வழிவகை செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மொரதபாத் தொகுதியை சமாஜ்வாதிக்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டதை அடுத்தே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்துக்கு கொண்டு வர சமாஜ்வாதி கட்சி இசைந்ததாக கூறப்படுகிறது.

விரைவில் காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட 17 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வாரணாசி, ஸ்ரவாஸ்தி, சிதாபூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையில் கலந்து கொள்ளாமல் அகிலேஷ் யாதவ் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி: பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!

Last Updated : Feb 22, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.