ETV Bharat / bharat

"சல்மான்கான் ரூ.5 கோடி தராவிட்டால்..." -வாட்ஸ் ஆப்பில் வந்த மிரட்டல் குறித்து போலீஸ் விசாரணை - SALMAN KHAN

சல்மான்கான் ரூ.5 கோடி தராவிட்டால்,பாபா சித்திக் போல கொலை செய்யப்படுவார் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மும்பை திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான்
சல்மான் கான் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 12:19 PM IST

மும்பை: லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பிரச்னைக்கு முடிவு ஏற்பட வேண்டும் எனில் சல்மான் கான் ரூ.5 கோடி தர வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் கொல்லப்படுவார் என்று மும்பை போக்குவரத்து போலீசாருக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த 12ஆம் தேதி மும்பையில் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கூலிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில், பாபா சித்திக்கின் நண்பரான சல்மான் கானை கொன்று விடுவதாக மும்பை போலீசாருக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து பேசிய போலீசார்,"போக்குவரத்து போலீசாருக்கு வந்த வாட்ஸ் ஆப் தகவலில் இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சல்மான் கான் உயிரோடு இருக்க வேண்டும் எனில் லாரன்ஸ் பிஷ்னோய் உடனான எதிரி மனப்பான்மையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.அதற்கு சல்மான் கான் ரூ.5 கோடி பணம் கொடுக்க வேண்டும்.பணம் கொடுக்காவிட்டால், பாபா சித்திக் போல அவரது கதையும் முடிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது,"என்று கூறினர்.எந்த வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து மிரட்டல் செய்தி வந்திருக்கிறது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: சல்மான் கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு: சிசிடிவியில் சிக்கிய முக்கிய குற்றவாளி?

சல்மான் கானுக்கு இது போல மிரட்டல் வருவது முதன் முறை அல்ல என்று போலீசார் கூறுகின்றனர்.பிஷ்னோய் கூலிப்படையினரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. சல்மான் கானின் வீடு அமைந்துள்ள பந்த்ரா பகுதியில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டு நபர்கள் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டனர். இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்போது வந்த வாட்ஸ் ஆப் மிரட்டலைத் தொடர்ந்து பந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்மான் கானிடம் மிகவும் கவனமாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனிடையே, நவி மும்பை போலீசார் லாரன்ஸ் பிஷ்னோய் கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய நபரான சுகா என்ற சுக்பீர் பால்பீர் சிங் என்பவரை பானிபட் பகுதியில் கைது செய்துள்ளனர். இந்த நபர் சல்மானைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

சல்மான்கானுக்கு ஏற்கனவே ஒய் ப்ளஸ் வகைப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இது தவிர தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன சிசிடிவி கேமராக்களை சல்மான் கானின் கேலக்சி அபார்ட்மெண்ட் வீட்டை சுற்றிலும் போலீசார் பொருத்தி உள்ளனர். இந்த சிசிடிவி கேமரா முகத்தை கண்டறியும் திறன் படைத்ததாகும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.