மும்பை: மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த கணிப்பு முன்பு 7.2 சதவிகிதமாக இருந்த நிலையில் இதனை தற்போதைய நிதி ஆண்டுக்கு 6.6ஆக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. அதே நேரத்தில் 11வது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.
இந்த நிதி ஆண்டுக்கான ஐந்தாவது இருமாத நாணயக் கொள்கை அறிவிப்பின் போது பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், "2022ஆம் ஆண்டு மே மாதம் கடன்களுக்கான வட்டி விகிதம் 250 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ச்சியாக இந்த விகித த்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பணவியல் கொள்கை குழுவானது, கடன்களுக்கான வட்டி விகித த்தை 6.5 சதவிகிதமாக தொடர்வது என்று முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர் கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது.
இதையும் படிங்க: "நான் பேசியதை பார்த்து ஜெயலலிதா மிரண்டு போனார்" - அமைச்சர் துரைமுருகன்!
பணவியல் கொள்கை குழுவானது எதிர்கால நடவடிக்கைக்காக வர இருக்கும் பெரிய பொருளாதார தரவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஜிடிபியை பொறுத்தவரை முந்தைய 7.7 சதவிகித கணிப்பில் இருந்து 6.6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டுக்கான பணவீக்க இலக்கை தற்போதைய 4.5 சதவிகிதத்தில் இருந்து 4.8 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வங்கிகள் கடன் அளிப்பதற்காக மேலும் பணப்புழக்கம் அதிகரிக்கப்பதற்காகவும், ரிசர்வ் வங்கியானது ரொக்க கையிருப்பு விகிதத்தை 4.5 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைத்துள்ளது,"என்றார்.
இதன் மூலம் கடன் அளிக்கும் திறனை மேலும் முன்னெடுக்கும் வகையில் ரூ.1.16 லட்சம் கோடி வங்கிகளுக்கு விடுவிக்கப்படும். ரொக்க கையிருப்பு விகிதம் என்பது வங்கியின் மொத்த டெபாசிட் தொகையாகும்.. ரிசர்வ் வங்கியிடம் பணமாக கையிருப்பு வைத்திருப்பதை நிர்வகிக்க வேண்டும். ரொக்க கையிருப்பு விகித த்தை அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப ரிசர்வ் வங்கி தீர்மானிக்கும். ஆனால், இந்த தொகைக்கு வங்கிகள் வடடி எதுவும் பெற இயலாது. அரசாங்கம் ரிசர்வ் வங்கியின் விகித நிர்ணயக் குழுவான -- நாணயக் கொள்கைக் குழு (MPC)வை மறுசீரமைத்தது.