ETV Bharat / bharat

'புதுச்சேரியில் வேட்பாளர்களிடம் ரூ.50 கோடி லஞ்சம் கேட்ட பாஜக' - நாராயணசாமி குற்றச்சாட்டு

Narayana Swamy: புதுச்சேரி தொகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட யாரும் தயாராக இல்லை. மேலும் சீட் வழங்க ரூ.50 கோடி லஞ்சம் கேட்கப்படுவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

V Narayanasamy slams BJP
V Narayanasamy slams BJP
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 7:40 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தனது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'உச்சநீதிமன்ற உத்தரவின் படியும், கண்டிப்பின் படியும் தேர்தல் பத்திர விவகாரம் அம்பலமாகி உள்ளது. தங்களை ஊழல் செய்யாத கட்சி எனக் கூறி வரும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வெட்கத்தில் தலைகுனிய வேண்டும்.

கட்சிக்குப் பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசு அமைப்புகளை வைத்து மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை பெறப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியின் இமாலய ஊழல். இந்த பணத்தை பயன்படுத்தித்தான் எதிர்கட்சிகளை கவிழ்க்கவும், நசுக்கவும் பயன்படுத்தப்பட்டது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், மோடி அரசின் இந்த தேர்தல் பத்திர நன்கொடை விவகாரம் ஒரு விஞ்ஞான ஊழல். இது குறித்து முறையான விசாரணை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகளை பாஜக சந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூட்டணி கட்சித் தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்!

தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் - திமுக ஆலோசனை செய்து இந்தியா கூட்டணி (INDIA Alliance) சார்பில் புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். ஆனால், பாஜகவினர் யாரும் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட தயாராக இல்லை.

மேலும், 50 கோடி ரூபாய் கொடுத்தால் தான் சீட் வழங்கப்படும் என பேரம் பேசப்படுகிறதாக தகவல் கிடைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுச்சேரி தொகுதியில் யார் வேட்பாளர் என்று ஆட்சியில் இருப்பவர்களால் முடிவு செய்ய முடியவில்லை. பணத்தை நம்பியும், லஞ்சத்தைப் பெற்றும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு புதுச்சேரி பாஜகவினர் வந்துவிட்டது பரிதாபமாக உள்ளது" என விமர்சித்தார்.

அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் வெளிநாட்டிற்கு இரிடியம் (Iridium) கடத்துவதாக புகார் கூறிய நாராயணசாமி, மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டிற்கு செல்லும் அமைச்சர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தகுதியில்லா செவிலியர்களுக்கு பணி நியமனம் செய்ததாக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.