ETV Bharat / bharat

2024 பத்ம விருதுகள்: விஜயகாந்த், சீரஞ்சீவி, நடிகை வைஜெயந்திமாலா ஆகியோருக்கு விருது வழங்கல்! - Padma awards 2024

மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.

Etv Bharat
2024 Padma Awards (Photo credits ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 7:47 PM IST

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையான் ராஷ்டிரபதி பவனில் இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று பத்ம விருதுகளை வழங்கினர். இந்த விழாவில் மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து கலைப் பிரிவில் தெலங்கு நடிகர் சீரஞ்சிவிக்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். அந்தமான் நிகோபார் தீவுகளை சேர்ந்த பெண் விவசாயி கே செல்லமாளுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கவுரவித்தார். மேலும், நடிகை வைஜெயந்திமாலா உள்ளிட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

மத்திய அரசால் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு தரப்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களின் பெயர்க விருதுக்காக பரிந்துரைக்கப்படுகின்றன.

பின்னர் விருது வழங்கும் குழுவால் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா நடத்தப்பட்டு உரியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கவுரவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

அதில் கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி, நடந்த முதல்கட்ட விருது வழங்கும் விழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, டென்னிஸ் வீரர் ரோகன் போபன்னா, பாடகி உஷா உதூப் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2024 பத்ம விருதுகள்: வெங்கையா நாயுடு, ரோகன் போபன்னா, பாடகி உஷா உதுப் ஆகியோருக்கு விருது வழங்கல்! - 2024 Padma Awards

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.