டெல்லி: 18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், சபாநாயகராக இரண்டாவது முறை ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (ஜூன்.27) நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.
18வது மக்களவையில் பதவியேற்றுக் கொண்ட எம்.பிக்கள் மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
#WATCH | President Droupadi Murmu addresses a joint session of both Houses of Parliament.
— ANI (@ANI) June 27, 2024
She says, " ...for the development of the northeast, my government has increased the (budget) allocation by over 4 times in the last 10 years. government is working to make this region… pic.twitter.com/9359lcF7eC
மூன்றாவது முறையாக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரும் 20 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அரசு வரவு வைத்ததாக கூறினார். காரீப் பருவ கால பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். நவீன காலத்திற்கு ஏற்ப விவசாய அமைப்பு மாற்றப்பட்டு தற்போதைய தேவைகளை அறிந்து அதற்கு எற்ற வகையில் பயிரிடுவதற்கான வசதிகளை அரசு பெருக்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
உலகளவில் இயற்கை விவசாய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்திய விவசாயிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக உலகமே கொண்டாடியதாகவும் அதேபோல் அண்மையில் சர்வதேச யோகா தினத்தை உலகமே இணைந்து கொண்டாடியதை அனைவரும் பார்க்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களை உற்பத்தியின் மையமாக அரசு மாற்றி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் அம்மாநிலங்களுக்காக 4 மடங்கு நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார். கிழக்கு கொள்கை பிரிவின் நுழைவு வாயிலாக வடகிழக்கு பிராந்தியத்தை உருவாக்கும் முனைப்பில் அரசு ஈடுபட்டு வருவதாக குடியரசு தலைவர் தெரிவித்தார்.
#WATCH | President Droupadi Murmu addresses a joint session of both Houses of Parliament, she says " my govt has provided rs 3.20 lakh crores to the farmers of the country under pm kisan samman nidhi. since the beginning of the new term of my government, an amount of more than rs… pic.twitter.com/EMNGRjXV1z
— ANI (@ANI) June 27, 2024
வடகிழக்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து இணைப்புகளும் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், அம்மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட அரசு போதிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறினார்.
கலவரம் மற்றும் பதற்றமான பகுதிகளில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டும், இரு பிரிவனருக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் அமைதி பேணிக் காக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
வறுமை ஒழிப்பு, இளைஞர், இளம்பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் கட்டமைக்க முடியும் என்றும் அதையே முதன்மையான முன்னுரிமையாக கொண்டு அரசு பணியாற்றி வருவதாகவும் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ரூ.3.3 லட்சம் சம்பளம்.. Z+ பாதுகாப்பு.. கேபினட் அமைச்சருக்கு நிகரான அதிகாரம்! ராகுல் காந்தியின் அதிகாரம் என்ன? - Rahul Gandhi