ETV Bharat / bharat

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது! - Prajwal Revanna Arrest - PRAJWAL REVANNA ARREST

Prajwal Revanna Arrested by SIT at Bengaluru airport: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த கர்நாடகா ஜேடிஎஸ் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியிலிருந்து பெங்களூரு வந்த போது, சிறப்பு புலனாய்வு குழு (SIT) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா
கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 8:15 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பியாக பதவி வகித்து வந்தவர், பிரஜ்வல் ரேவண்ணா. சமீபத்தில் அவர் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார்.

அதாவது, ஹாசன் தொகுதியில் மக்களவைத் தேர்தல் முடிந்த மறுநாள் கடந்த ஏப்.27 ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், அவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் கேட்டு இன்டர்போல் ஏற்கனவே 'ப்ளூ கார்னர் நோட்டீஸ்' பிறப்பித்தது.

அதன்படி, சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிறநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த மே 18 ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது. மேலும், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. இதற்கிடையே, அவரை இடைநீக்கம் செய்ததோடு, அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, பாலியல் தொடர்பான புகார்கள் அவர்மீது குவிந்ததால், கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிகழ்ந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியது.

கடந்த 27ஆம் தேதி ஜெர்மனி சென்ற பிரஜ்வல் ரேவண்ணா, 28ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், மே 31ஆம் தேதி நாடு திரும்புவதாகவும், அதனைத்தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராக உள்ளதாவும் தெரிவித்திருந்தார். தற்போது ஒரு மாதங்கள் ஆன நிலையில், நேற்று ஜெர்மனின் முனிச் நகரிலிருந்து புறப்பட்டு இன்று நள்ளிரவு (மே 31) 1.30 மணியளவில் பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கு அவருக்காக காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை எஸ்ஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதற்கு முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு எஸ்ஐடி (Special Investigation Team) முன் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல"- ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.