ETV Bharat / bharat

கேரளாவில் மூதாட்டியின் வாக்கை செலுத்தினாரா சிபிஎம் தலைவர்! வைரலாகும் சிசிடிவி! தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்! - Lok Sabha Election 2024

கேரளாவில் 92 வயது மூதாட்டி வாக்களிப்பதை அருகில் இருந்து சிபிஎம் தலைவர் பார்த்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில் தேர்தல் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 4:10 PM IST

கன்னூர் : நாடு முழுவதும் முதல் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டம் கல்லியசேரியில் வயது முதிர்ந்தவர்களிடம் வீடு வீடாக சென்று வாக்குப்பதிவு நடத்தும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது மூதாட்டி ஒருவர் தனது வாக்கை செலுத்தும் போது அருகில் சிபிஎம் கட்சித் தலைவர் இருந்து முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் கல்லியசேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உதவி தேர்தல் அலுவலர் அளித்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறப்பு தேர்தல் அலுவலர்கள், சிறப்பு காவலர், வீடியோகிராபர் உள்ளிட்டவர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருன் கே விஜயன் உத்தரவிட்டார்.

கேரளாவில் மக்களவை தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் வாக்குகளை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று பெரும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி தேர்தல் அலுவலர்கள், சிறப்பு காவலர், வாக்குப்பதிவு நிகழ்வை பதிவு செய்யும் வீடியோகிராபர் உள்ளிட்ட குழுவினர் இதற்காக நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று வாக்குப்பதிவு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கன்னூர் மாவட்டம் கல்லியசேரி பகுதியில் வாக்குப்பதிவு மேற்கொள்ள சென்ற வீட்டில் 92 வயதான மூதாட்டி தேவகியின் வாக்கை சிபிஐ தலைவர் செலுத்த முயன்றதாக சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதையும் படிங்க : மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களை கைப்பற்றும் - காந்தி நகரில் அமித்ஷா வேட்புமனுத் தாக்கல்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.