நந்துர்பார்: மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் பகுதியில் பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பிறகு போலி தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவ சேனா கட்சிகள் காங்கிரசுடன் தங்களது கட்சிகளை இணைக்க திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரசுடன் தங்களது கட்சியை இணைப்பதற்கு பதிலாக அவர்கள் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் இணையலாம்" என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 40 - 50 ஆண்டுகளாக அரசியலில் உள்ள பெரிய தலைவர் ஒருவர், பரமதி மக்களவை தொகுதி தேர்தலுக்கு பின்னர் கலக்கத்தில் உள்ளார் என சரத் பவார் குறித்து பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார்.
ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் சிறிய கட்சிகள் தொடந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், அரசியலில் உயிர்ப்புடன் இருக்கவும் காங்கிரசுடன் தங்களது கட்சியை இணைக்க திட்டமிட்டுள்ளதாக சரத் பவாரின் பெயரை குறிப்பிடாமல பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார்.
காங்கிரசுடன் கட்சியை இணைப்பதற்கு பதிலாக சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்ரே ஆகியோர் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் ஒன்றிணையலாம் என்று பிரதமர் மோடி கூறினார். முன்னதாக அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு பிராந்திய கட்சிகள் காங்கிரசுடன் மிக நெருக்கமாக இருக்கும் அல்லது தங்களது கட்சிகளை காங்கிரசுடன் ஒன்றிணைக்கும் என சரத் பவார் கூறி இருந்த நிலையில் அதை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி கூறியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்துத்துவா நம்பிக்கையை முடிவுக் கொண்டு வர காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் குருவான இளவரசர் ராகுல் காந்தி ராமர் கோயில் மற்றும் ராம் நவமி திருவிழாக்கள் இந்தியா கருத்தியல் கொள்கைக்கு எதிரானது என அமெரிக்காவில் பேசியதாகவும் தெரிவித்தார்.
மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் இந்த மோடி உயிருடன் இருக்கும் வரை தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் வழங்க விடமாட்டேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானா எம்எல்சி காவிதா ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு! - Delhi Excise Policy