சஹரன்பூர் : உத்தர பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது பாஜகவின் நோக்கம் மற்றும் அந்த பணி முடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார். மேலும் காஷ்மீரை பிரித்தாளும் எண்ணம் கொண்டவர்கள் வீசிய கற்களை, கொண்டு விக்சித் ஜம்மு காஷ்மீரைக் கட்டத் தொடங்கி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பாஜக அரசு எந்தவித பாகுபாடும் இல்லாமல் செயல்படுவதாகவும் எங்கள் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் அதற்காக 10 ஆண்டுகள் உழைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மக்கள் 100 சதவீதம் பயனடைய வேண்டும் என்றும் அதுதான் உண்மையான மதச்சார்பினை மற்றும் சமூக நீதி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தியக் கூட்டணி கட்சிகள் தங்களது போராட்டம் சக்திக்கு எதிரானது என்று சவால் விடுகிறார்கள், சக்தியை அழிக்க முயன்ற அனைவருக்கும் என்ன நடந்தது என்பது வரலாற்றிலும் புராணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இது மகா சக்தியின் இடம், சக்தி வழிபாட்டை ஒருபோதும் புறக்கணிக்காத நாடு இந்தியா என்று பிரதமர் மோடி கூறினார்.
சக்திக்கு எதிரான போராட்டம் என்று இந்தியக் கூட்டணியினர் சவால் விடுவது நாட்டின் துரதிர்ஷ்டம் என்றும் அதை எதிர்க்க முயற்சித்த அனைவருக்கும் என்ன ஆனது என வரலாற்றிலும், புராணங்களிலும் பதிவாகி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதை தடுப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் கூட்டணியில் போட்டியிடுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது, கமிஷன் சம்பாதிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கமிஷன் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டு இருக்கும் என பிரதமர் மோடி கூறினார். பாஜக 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் போராடுவதாகவும், சமாஜ்வாதி கட்சி ஒவ்வொரு மணி நேரமும் வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் காங்கிரசில் நிறுத்துவதற்கு கூட வேட்பாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.