ETV Bharat / bharat

2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் தினம்... குடியரசு தலைவர்,பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி! - 23 YEARS OF PARLIAMENT ATTACK

2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடியபோது உயிரிழந்த தியாகிகளுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் தினம், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி
2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் தினம், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி (Image credits-PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 12:19 PM IST

புதுடெல்லி: 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்தோருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இது குறித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"தீவிரவாத சக்திகளுக்கு எதிராக தேசம் ஒன்றிணைந்திருக்கிறது. 2001ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தை பாதுகாக்க தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான இதயங்களுக்கு எனது பணிவான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றேன்," என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி: 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படங்களுக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திரமோடி, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம்பிர்லா, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உயிர்நீத்தோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2001 ஆம் ஆண்டு இந்நாளில் நமது பாராளுமன்றத்தை காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன்,"என்று கூறியுள்ளார்.

23 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தாக்குதல்: 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் ஊடுருவிய தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்ட டெல்லி உதவி காவல் ஆய்வாளர்கள் ஜகதீஷ், மத்பார், கமலேஷ் குமாரி; நானக் சந்த் மற்றும் ராம்பால், டெல்லி போலீசில் பணியாற்றிய தலைமை காவலர்கள் ஓம்பிரகாஷ், பிஜந்தர் சிங் மற்றும் கன்ஷ்யாம், மத்திய பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தோட்ட பாதுகாவலர் தேஷ்ராஜ் ஆகியோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டோர் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். டெல்லி போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.