ETV Bharat / bharat

சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது - பிரதமர் மோடி அறிவிப்பு - பாரத ரத்னா

Bharat Ratna: முன்னாள் இந்தியப் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 12:58 PM IST

Updated : Feb 10, 2024, 2:24 PM IST

டெல்லி: முன்னாள் இந்தியப் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை, பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

மேலும், இது தொடர்பாக தனது X வலைத்தளப் பக்கத்தில் பாரத ரத்னா விருதாளர்கள் குறித்து மோடி பதிவிட்டு உள்ளார். அதில்,

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்: நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்-க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நம்முடைய அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்படுகிறது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர்.

உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அவர் தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கு எப்போதும் உத்வேகம் அளித்தவர். எமர்ஜென்சிக்கு எதிராகவும் அவர் உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ்: நமது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ்-க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்காக செயலாற்றினார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகளுக்காக நினைவுகூரப்படுபவர்.

அவரது தொலைநோக்கு தலைமையில், இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி, நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. நரசிம்ம ராவ் நாட்டின் பிரதமராக இருந்த காலம், பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வளர்த்து, உலகச் சந்தைகளுக்கு இந்தியாவை திறந்த, குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளால் அடையாளப்படுத்தப்பட்டது.

மேலும், நாட்டின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் முக்கியமான மாற்றங்களின் மூலம் இந்தியாவை வழிநடத்தியது மட்டுமல்லாமல், அதன் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தையும் செழுமைப்படுத்திய ஒரு தலைவராக அவரது பன்முக மரபை சுட்டிக்காட்ட முடியும்.

வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்: விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சவாலான காலங்களில் நமது இந்திய நாடானது விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில், அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

ஒரு கண்டுபிடிப்பாளராகவும், வழிகாட்டியாகவும் மற்றும் பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கிறேன். டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை என்பது, இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் அதன் செழுமையையும் உறுதி செய்துள்ளது. அவர் எனக்கு நெருக்கமான ஒருவர். அவருடைய நுண்ணறிவு மற்றும் கருத்துகளின் உள்ளீடுகளை நான் எப்போதும் மதிப்பேன்.

இதையும் படிங்க: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது - பிரதமர் மோடி அறிவிப்பு!

Last Updated : Feb 10, 2024, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.