பார்படோஸ்: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. பார்படோசில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, பல வரலாற்று சுவடுகளை திருத்தியது. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு ஐசிசி உலக கோப்பையை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள்:
ஷாஹித் அப்ரிடி
திலகரத்னே தில்ஷன்
கெவின் பீட்டர்சன்
ஷேன் வாட்சன்
விராட் கோலி (2 முறை)
டேவிட் வார்னர்
சாம் கர்ரன்
ஜஸ்பிரித் பும்ரா
இரண்டு முறை டி20 உலக கோப்பை பட்டம் வென்ற அணிகள்:
வெஸ்ட் இண்டீஸ் (2012 & 2016)
இங்கிலாந்து (2010 & 2022)
இந்தியா (2007 & 2024
ஒரு சீசனில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி:
8 இந்தியா (2024)
8 - தென்னாப்பிரிக்கா (2024)
8 - ஆஸ்திரேலியா (2022-2024)
7 - இங்கிலாந்து (2010-2012)
7 - இந்தியா (2012-2014)
டி20 உலக கோப்பையில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகள்:
8 - இந்தியா (2024)*
8 - தென்னாப்பிரிக்கா (2024)*
6 - இலங்கை (2009)
6 - ஆஸ்திரேலியா (2010)
6 - ஆஸ்திரேலியா (2021)
20 ஓவர் உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள்:
17 - ஃபசல்ஹக் ஃபரூக்கி (ஆப்கானிஸ்தான், 2024)
17 - அர்ஷ்தீப் சிங் (இந்தியா, 2024)
16 - வனிந்து ஹசரங்கா (இலங்கை, 2021)
15 - அஜந்தா மெண்டிஸ் (இலங்கை, 2012)
15 - வனிந்து ஹசரங்கா (இலங்கை 2012)
15 - அன்ரிச் நோர்ட்ஜெ (தென் ஆப்பிரிக்கா 2024)
15 - ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா 2024)
டி20 உலக கோப்பையில் பவுலர்களின் சிறந்த செயல்பாடு:
4/12 - அஜந்தா மெண்டிஸ் vs வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, கொழும்பு 2012
3/9 - சுனில் நரைன் vs இலங்கைக்கு எதிராக, கொழும்பு 2012
3/12 - சாம் கர்ரன் vs பாகிஸ்தான் அணிக்கு எதிராக, மெல்போர்ன் 2022
3/20 - ஹர்திக் பாண்டியா vs தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, பிரிட்ஜ்டவுன் 2024
இது தவிர மூன்று முறை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2007ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டு மகுடம் சூடிய இந்திய அணி 2012 ஆம் அண்டு இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது. அதேபோல், ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
இதையும் படிங்க: உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஸ்டாலின், இபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து! - Leaders Wish Team India