கயா (பீகார்): பீகார் மாநிலம் கயாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற கயா தாம் எனப்படும் புண்ணிய தானம் செய்யப்படும் கோயிலில், செப்டம்பர் 17ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதற்காக வர உள்ளனர். ஆண்டுதொறும் நடைபெறும் இந்த திதி நிகழ்வில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம்.
உயிருடன் இருக்கும்போது எதற்கு திதி? இங்கு வரும் மக்களுள் பலர், தான் இறந்த பிறகு இறைவனை அடைய வேண்டும், முக்தி பெற வேண்டும் என தனக்குத் தானே சுய திதி செய்கின்றனர். இதை பொதுவாக சாதுக்கள், சந்நியாசிகள், குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் அல்லது குழந்தை இல்லாதவர்கள் செய்வது வழக்கம். அதற்கு காரணம், அவர்கள் இறந்த பின் அவர்களது சந்ததியினர் அல்லது உறவினர்கள் இதை செய்ய தவறலாம், அதனால் முக்தி அடையாமல் அவர்கள் ஆத்மா இருந்து விடக்கூடாது என நினைத்து இதை செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இந்த சடங்கை அதிகளவில் செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பேய்க்கு வரன் தேடிய பெற்றோர்.. மாப்பிள்ளையும் பேய் தான்! இது எந்த ஊருல?
பிண்டத்தை ஏற்றுக்கொள்ளும் விஷ்ணு: இந்த கயா தாமில் விஷ்ணு ஜனார்தன் வடிவில் உள்ளார். கருங்கல்லால் செய்யப்பட்ட மிக அதிசயமான சிலையாகும். மேலும், இங்கு விஷ்ணு உடலை ஏற்றுக்கொள்ளும் தோரணையில் அமர்ந்துள்ளார். இங்கு வந்து திதிக்காக பிண்டம் கொடுப்பவர்கள் விஷ்ணுவின் கையில் பிண்டத்தைச் சமர்ப்பிக்கின்றனர். அப்போது விஷ்ணு பிண்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் தனக்கு இறப்பிற்கு பின் முக்தி அளிக்கிறார் என நம்பப்படுகிறது.
விருப்பங்களை நிறைவேற்றும் புராணம்: இந்தக் கோயில் புராணங்களில் பல வகையான வரலாற்று கதைகள் கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆலயம் (பிண்டவேதி எனப்படும் காய தாம்) விருப்பங்களை நிறைவேற்றுவதில் பெயர் பெற்றது. அதிலும் உடலை இழந்த ஆன்மாக்களின் ஆசைகளை ஜனார்தன் வடிவில் காட்சியளிக்கும் விஷ்ணு உடனடியாக நிறைவேற்றுவார் எனக் கூறப்படுகிறது.
விஷ்ணுவுடன் இருக்கும் ஆன்மாக்கள்: விஷ்ணுவின் ஜனார்தனின் வடிவமானது தத்ரூபமாக வடிவைக்கப்பட்டுள்ளது. இங்கு விஷ்ணு கண் விழித்த நிலையில் காட்சியளிக்கிறார். இந்த இடம் குறித்து விவரித்த அர்ச்சகர் ஆகாஷ் கிரி கூறுகையில், “இந்த கோயில் மிகவும் விசித்திரமும், மர்மமும் வாய்ந்த கோயில். இங்கு பல வகையான ஆவிகள் பல்வேறு ஆசைகளுடன் விஷ்ணுவிடம் வருகின்றனர். அதில் பல ஆவிகள் விஷ்ணு உடன் இங்கே இருக்கின்றனர். அதனால் தான் இந்த கோயிலே பிண்டம் வடிவில் கட்டப்பட்டுள்ளது” என்றனர்.
ராஜா மான்சிங் திருப்பணி: இதையடுத்து பேசிய அர்ச்சகர் பிரபாகர் குமார், “இந்த கோயிலின் முக்கியத்துவம் புராணங்களின் வழி கூறினால், இக்கோயில் ராஜா மான்சிங் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கோயில் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டது.
அதையடுத்து இந்த கோயில் நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்ததால், இந்த கோயிலின் நிலை இருக்க வேண்டிய அளவிற்கு அழகாக இல்லை. ஏனென்றால், உலகில் சுயம்பு யாகம் செய்யும் ஒரே கோயில் (காய தாம்) இதுதான். அதை சீரமைக்க வேண்டும். ராஜா மான்சிங்கிற்குப் பிறகு, இந்தக் கோயில் யாராலும் பெரிதாக புதுப்பிக்கப்படவில்லை” எனக் கூறினார்.