ETV Bharat / bharat

4 ஆம் கட்ட தேர்தலில் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024 4th Phase : 2024 மக்களவைத் தேர்தலின் நான்காம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆந்திரா, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நட்சத்திர வேட்பாளர்கள் புகைப்படம்
நட்சத்திர வேட்பாளர்கள் புகைப்படம் (Credit -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 1:47 PM IST

ஹைதராபாத்: நாடு முழுவதும் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகள், பீகாரில் 5, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதனுடன் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. இதில் அகிலேஷ் யாதவ், அசாருதீன் ஒவைசி, ஒய்.எஸ்.சர்மிளா உள்ளிட்ட பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

அகிலேஷ் யாதவ் (கன்னோஜ் உ.பி): உத்தரப் பிரதேசம் மாநிலம் கன்னோஜ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். பல ஆண்டுகளாக அக்கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலில் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

இதனையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னோஜ் தொகுதியின் வேட்பாளராக அகிலேஷின் உறவினர் தேஜ் பிரதாப் சிங் யாதவ் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை திரும்பப்பெற்று தற்போது அகிலேஷ் யாதவ் நேரடியாக இத்தொகுதியில் களம் காண்கிறார். இதனால் இந்த தொகுதி முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

அசாதுதீன் ஒவைசி: மஜ்லிஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹைதராபாத் நாடாளுமன்றத் தொகுதியில், 1984 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் வரை சுல்தான் சலாவுதீன் எம்பியாக இருந்தார். அவரை தொடர்ந்து 2004 ஆம் முதல் சுல்தான் சலாவுதீன் மகனும், ஏஐஎம்ஐஎம்(AIMIM) கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி எம்பியாக இருந்து வருகிறார்.

தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் இந்த தொகுதியில் களம் காண்கிறார் ஒவைசி. அதேபோல் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முகமது வலியுல்லா சமீர், பிஆர்எஸ் சார்பில் சீனிவாசன் யாதவ், பாஜக சார்பில் மாதவி லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஒய்.எஸ்.ஷர்மிளா: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் மகளும், ஆந்திர காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் சார்பில் அவினாஷ் ரெட்டி போட்டியிடுகிறார்.

மஹுவா மொய்த்ரா: நாடாளுமன்ற வளாகத்தில் தனது அனல் பறக்கும் பேச்சின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான மஹுவா மொய்த்ரா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்ற விதிகளை மீறி மஹுவா மொய்த்ரா செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கடந்த ஆண்டு அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கிருஷ்ணா நகர் தொகுதியில் களம் காண்கிறார். அவரை எதிர்த்து பாஜகவின் புதுமுகம் அம்ரிதா ராய் போட்டியிடுகிறார்.

இதையும் படிங்க: "ஏணில ஒரு குத்து, தென்ன மரத்துல ஒரு குத்து" இரண்டு பக்கமும் ஆதரவு கேட்கும் தெலுங்கு நடிகர்கள்...ஆனா ரஜினி தான் முன்னோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.