ETV Bharat / bharat

"எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு... ஜனநாயகத்தின் கரும்புள்ளி"- பிரதமர் மோடி! - Lok Sabhe session 2024 - LOK SABHE SESSION 2024

எதிர்க்கட்சிகளிடம் இருந்து மக்கள் விரும்புவது நல்ல திட்டங்களுக்கான ஒத்துழைப்பே தவிர முழக்கங்கள் கோஷங்கள் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
PM Modi speaking to the media ahead of the first session of 18th Lok Sabha in New Delhi (Photo Credit: X/narendramodi)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 12:15 PM IST

டெல்லி: 18வது மக்களவை கூட்டத் தொடர் இன்று (ஜூன்.24) காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற விருப்பம், அதன் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் மீது கொண்டிருந்த மக்களின் நம்பிக்கையின் காரணமாக மூன்றவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதாக கூறினார்.

அனைத்து தரப்பு மக்களின் விருப்பம் மற்றும் எண்ணங்களை செயல்படுத்தக் கூடிய ஆட்சியாக இந்த அரசு இருக்கும் என்றார். சிறந்த இந்தியா, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்த அரசு தொடர்ந்து பயணிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு நாளையுடன் (ஜூன்.25) 50 ஆண்டுகளாவதாக கூறிய பிரதமர் மோடி, அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டு இந்திய ஜனநாயகத்தின் கரும் புள்ளி எமர்ஜென்சி என்றும் கூறினார்.

2047ஆம் ஆண்டு வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் திட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்களை வரவேற்பதாக பிரதமர் மோடி கூறினார். மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதகாவு, ஆனால் அதற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தற்போதைய நிலை உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் இந்திய ஜனநாயகத்தில் தங்களுக்கான பங்கை ஆற்றுவார்கள் என தான் நம்புவதாக பிரதமர் மோடி கூறினார். இந்தியா பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும், அதுவே மக்களின் விருப்பம் என்றும் குழப்பங்கள், முழக்கங்கள் இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் விவாதத்தை விரும்புவதாகவும் அது நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வல்லது என்றும் பிரதமர் மோடி கூறினார். 18வது மக்களவை தேர்தலில் 65 கோடி வாக்காளர்கள் தங்கள் பங்களிப்பை தந்துள்ளதாகவும், நாடு சுதந்திரம் பெற்ற பின் மூன்றாவது முறையாக ஒரு அரசு பதவியேற்பது என்பது இரண்டாது நிகழ்வு என்றும் அதுவும் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதனிடையே தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாபுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதையும் படிங்க: இளங்கலை நீட் மறுதேர்வு: 750 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை! என்ன காரணம்? - NEET UG Retest

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.