புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான இன்றும் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அதானி மீதான வழக்கு குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று இரு அவைகளிலும் வக்ஃப் திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்கள் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டிருந்தன. மக்களவை இன்று கூடியதும் சில துறைகள் தொடர்பான அறிக்கைகளை மத்திய அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். எனினும் அதானி மீதான அமெரிக்க வழக்கு குறித்து விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
எதிர்கட்சிகளின் உறுப்பினர்களை அமைதியாக இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் ஓம்பிர்லா வலியுறுத்தினார். எனினும், எதிர்கட்சியினர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லாவின் கோரிக்கைக்குப் பின்னரும் எதிர்கட்சி எம்பிக்கள் அமைதி காக்கவில்லை. இதையடுத்து மக்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு: மாநிலங்களவை இன்று கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள அதானி மீதான வழக்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அதானி விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 18 ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கான நோட்டீஸ்களை கொடுத்திருந்தனர்.
The Rajya Sabha has been adjourned for the day amid heavy sloganeering and creation of ruckus over the indictment of the Adani Group by a US court. It will meet again at 11 am on Thursday, November 28.#Parliament #ParliamentWinterSession #JagdeepDhankhar pic.twitter.com/5P3wr3mgzu
— ETV Bharat (@ETVBharatEng) November 27, 2024
இதையும் படிங்க: தாம்பரம் சப்-வேயில் தனியாக நடந்தவருக்கு அதிர்ச்சி.. மாடிக்கு போன 15 வயது சிறுமிக்கு நடந்த சோகம்..!
ஆனால் இந்த 18 நோட்டீஸ்களையும் ஜகதீப் தங்கர் தள்ளுபடி செய்தார். இதனால் எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து முதலில் அரை மணி நேரம் மட்டும் அவையை மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீர் தங்கர் ஒத்தி வைத்தார். மீண்டும் முற்பகல் 11.30க்கு அவை கூடிய பின்னரும் எதிர்கட்சியினரின் கூச்சல் குழப்பம் தொடர்ந்ததால் நாள் முழுவதும் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.
On the allegations against Adani Group, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi said that Adani would never accept the charges. He said, " obviously he is going to deny the charges.#RahulGandhi #AdaniBribe #GautamAdani #ParliamentWinterSession pic.twitter.com/m7tat35tZi
— ETV Bharat (@ETVBharatEng) November 27, 2024
அதானியை பாதுகாக்கும் அரசு: இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அதானி தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அமெரிக்காவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அரசு அவரை பாதுகாக்கிறது," என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்