ETV Bharat / bharat

மக்களவையில் காங்.,உறுப்பினர் ஜோதி மணி பேச்சால் சர்ச்சை...மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு!

மக்களவையில் இன்றைய நிகழ்வின் போது பேசிய தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதி மணி, பாஜகவுக்கும் பிரபல தொழிலதிபருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதி மணி
மக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதி மணி (Image credits-Sansad TV)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

புதுடெல்லி: மக்களவையில் இன்றைய நிகழ்வின் போது பேசிய தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதி மணி, பாஜகவுக்கும் பிரபல தொழிலதிபருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 13ஆவது நாளாக இன்று வழக்கம் போல் தொடங்கியது. மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மதுரை டங்க்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது குறித்து பேசிய அவர், "மதுரையில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள டங்க்ஸ்டன் சுரங்க திட்டம் தமிழகத்தின் முதலாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாகும். இந்த சுரங்க திட்டமானது அந்த பிராந்தியத்தின் சூழலுக்கு அச்சுறுத்தல் ஆகும். இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது மட்டுமின்றி, அந்த பகுதி நிலத்தை சார்ந்திருக்கும் ஆயிரகணக்கான மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதகமான சூழலை ஏற்படு்ததும். எனவே தமிழக மக்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை ரத்து செய்ய உடன நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்று கோரிக்கை விடுத்தார்.

மன்னிப்பு கடிதம் கொடுத்த திரிணாமூல் எம்பி: மக்களவையில் நேற்று பேரிடர் மேலாண்மை திருத்த சட்டம் குறித்த விவாதத்தின் போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியாவுக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி கல்யாண் பானர்ஜி ஆட்சேபத்துக்குரிய வார்த்தையை பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இதற்காக அவையிலேயே அவர் மன்னிப்புக் கேட்டார். எனினும் அதனை ஏற்கமுடியாது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா கூறி விட்டார். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும் இந்த விவகாரத்தை ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது தலையிட்ட சபாநாயகர் ஓம்பிர்லா, "புதன்கிழமையன்று அவையில் எதிர்பாரத நிகழ்வு நடந்திருக்கிறது. எந்த ஒரு உறுப்பினரும் சக உறுப்பினருக்கு எதிராக எந்த ஒரு தனிப்பட்ட விமர்சனமும் மேற்கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்ட உறுப்பினர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அவர் என்னிடம் எழுத்துப்பூர்வமாகவும் மனிப்புக் கடிதம் கொடுத்திருக்கிறார்,"என்று கூறினார்.

ஜோதி மணி பேச்சால் சர்ச்சை: மக்களவையில் இன்று கேள்வி நேரம் முழுமையாக நடைபெற்றது. இதன் பின்னர் காங்கிரஸ் கட்சி-ஜார்ஜ் சோரோஸ் இடையேயான தொடர்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரினர். அப்போது தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஜோதி மணி, "பாஜகவுக்கும்-பிரபல தொழிலதிபருக்கும் தொடர்பு இருக்கிறது.அது குறித்து விவாதிக்க வேண்டும்,"என்று குறிப்பிட்டார். அப்போது அவையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் ஜெகதாம்பிகா பால், "தொழிலதிபரின் பெயர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது,"என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், "அவையின் குறிப்பில் இருந்து ஒரு வார்த்தை நீக்கப்படுவது குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்படுகிறது. மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று இந்த அவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் ஏன் நீக்கப்படவில்லை,"என்று கேள்வி எழுப்பினார். இதனால் எழுந்த கூச்சல் குழப்பத்தை அடுத்து மக்களவை மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மக்களவை மீண்டும் கூடியபோது பேரிடர் மேலாண்மை திருத்த சட்டம் 2024ன் மீது விவாதம் நடைபெற்றது.

மாநிலங்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவையில் அதன் அவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக எதிர்கட்சி எம்பிகளுக்கும், ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் இடையே கூச்சல் குழப்பம் நிலவியது. அதே போல ஆளும் கட்சியினர் காங்கிரஸ் கட்சி-ஜார்ஜ் சோரோஸ் இடையேயான தொடர்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மாநிலங்களவை முதலில் உணவு இடைவேளை வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.