டெல்லி: கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணி சங்கர் ஐயர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தானும் இறையாண்மை கொண்ட நாடு. அவர்கள் மரியாதைக்குரிய தேசம். மத்திய அரசு பாகிஸ்தானை கடுமையாக வசைபாடலாம்.
ஆனால் பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். துப்பாக்கியுடன் நடப்பதால் ஒன்று கிடைக்கப் போவதில்லை அது மேலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்பு அரசியால் அமைந்தால் இந்தியாவின் கதி என்னவாகும். பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது, நம்மிடமும் அணுகுண்டு உள்ளது. ஆனால் இந்திய எதிர்ப்பு அரசியல் காரணமாக லாகூர் நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்தால், எட்டு நிமிடங்களுக்குள் அதன் கதிரியக்க வீச்சி நமது நாட்டின் அமிர்தசரஸை அடைந்துவிடும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அவர்கள் அணுகுண்டுகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கினால் இரு தரப்பிலும் சுமூகம் ஏற்படும். பாகிஸ்தானிடம் உள்ள அணுகுண்டுகளை கருத்த்தில் கொண்டு இந்தியா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
அங்கு இந்திய எதிர்ப்பு அரசியல் கொண்டு தலைவர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துக் கூடும் என்று மணி சங்கர் ஐயர் தெரிவித்தார். பிரதமர் மோடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த மணி சங்கர் ஐயர், கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
உலகின் தலைமைப் பொறுப்பை அடைய விரும்பும் நாம், அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கை விரும்பாமல் வேகமாக இரு தரப்பு பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மணி சங்கர் ஐயர் தெரிவித்தார். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளத்.
மணி சங்கர் ஐயரின் சர்ச்சைக் கருத்துக்கு பல்வேறு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்த மக்களவை தேர்தலுக்கான ராகுலின் காங்கிரஸ் சித்தாந்தம் இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது மற்றும் பெறுவது சியாசின் மலை பிரதேசம் உள்ளிட்டவற்ரை பாகிஸ்தானுக்கு வழங்குவது, எஸ்டிபிஐ, யாஷின் மாலிக் போன்ற உள்நாட்டு பயங்கர அமைப்புகளை ஆதரிப்பது தான் காங்கிரஸின் கொள்கை என்று தெரிவித்தார்.
மேலும், ஊழல் மற்றும் ஏழைகளுக்கான பணத்தை கொள்ளை அடிப்பது, சாம் பிட்ரோடாவின் இனவெறி, பிரிவினைவாதம், பல ஆண்டுகளாக முன்னேற்றம் மறுக்கப்பட்ட எஸ்சி, ஓபிசி மற்றும் எஸ்டி உள்பட பல்வேறு பிரிவு மக்களின் இடஒதுகீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்குவது தான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக சதித் திட்டம்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு - Lok Sabha Election 2024