ETV Bharat / bharat

'எங்களது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்'.. ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் பதில்..! - sebi chief Madhabi Buch - SEBI CHIEF MADHABI BUCH

madhabi buch reply on hindenburg allegations: ஹிண்டன்பர்க் நிறுவனம் வைத்த குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் இருவரும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

செபி தலைவர் மதாபி பூரி புச் (கோப்புப்படம்)
செபி தலைவர் மதாபி பூரி புச் (கோப்புப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 12:59 PM IST

டெல்லி: அதானி குழுமம் பண மோசடியில் பயன்படுத்தப்பட்ட இரு மறைமுக நிதிகளில் செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம் சாட்டியது.

இந்த குற்றசாட்டை மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இருவரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தின் கடல்சார் நிதியில் செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றசாட்டு வைத்தது.

மேலும், செபியின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளதாகவும் அதனால் தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.

அதோடு, செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம் என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இருவரும் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஹிண்டன்பெர்க் எங்கள் மீது வைத்துள்ள ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கடுமையாக மறுக்கிறோம். ஹிண்டன்பெர்க் மீது அமலாக்க நடவடிக்கை எடுத்து, சோக்காஸ் நோட்டீஸ் அனுப்பியதால் இவ்வாறு பொய் குற்றசாட்டுகளை வைக்கிறது. எங்களது வாழ்க்கையும், நிதியும் ஒரு திறந்த புத்தகம்.

நாங்கள் ஒரு சாதாரண தனிப்பட்ட குடிமக்களாக இருந்த காலகட்டம் உட்பட அனைத்து நிதி ஆவணங்களையும் வெளிப்படுத்துவதில் எந்தவொரு தயக்கமும் எங்களுக்கு கிடையாது. வெளிப்படைத் தன்மையின் நலன் கருதி, உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம்'' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் மறைவு! பிரதமர் மோடி இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.