ETV Bharat / bharat

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக மைண்ட் கேம்! சத்தீஷ்கரில் பாதுகாப்புப் படையினரின் திட்டம் கை கொடுக்குமா? - Operation Kagar - OPERATION KAGAR

Operation Kagar: 'ஆபரேஷன் ககர்' என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக

Operation Kagar has been launched against the Maoists

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 8:17 PM IST

ஹைதராபாத்: மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் உளவியல் போர் தொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், நாட்டில் மாவோயிஸ்ட்டுகளின் கோட்டையாகத் திகழும் அபுஜஹமத்தை ஊடுருவும் நோக்கில், சிறப்பான உத்திகளுடன் பல முன்னோக்கி இயக்க தளங்களை (Forward Operating Bases) அமைத்து, தண்டகாரண்யாவை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பஸ்தார், பிஜாப்பூர், தண்டேவாடா, கான்கேர், கொண்டகான், நாராயணபூர் மற்றும் சுக்மா மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த பஸ்தார் பிரிவிலேயே நடந்துள்ளன. ஆகவே, அந்த பஸ்தார் பிரிவு பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஆபரேஷன் ககர் (Operation Kagar) என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதக் காவல் படையின் (Central Armed Police Forces) பிரிவுகள் சத்தீஸ்கரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், ஒடிசாவில் இருந்து மூன்று BSF பட்டாலியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேசமயம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) ஒரு பிரிவு அபுஜாமத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோல, 8 ITBP பட்டாலியன்கள் நாராயணபூர், ராஜ்நந்த்கான் மற்றும் கொண்டகான் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்பட்டு, புதிய முன்னோக்கி இயக்கத் தளங்களை உருவாக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட சம்பவம், "சத்தீஸ்கரில் உள்ள பாதுகாப்புப் படையினரின் மிகப்பெரிய வெற்றி" என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் இதுபோன்ற இரண்டு பெரிய என்கவுன்டர்கள் கடந்த காலங்களில் நடந்திருந்தாலும், மாவோயிஸ்ட்டுகள் அதிகம் உள்ள சத்தீஸ்கரில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் FOB உத்திகள்: இந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி சத்தீஸ்கரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) முகாம் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 3 ஜவான்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.

அதே நேரத்தில், இந்திராவதி ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தின் தடோபோட்டில் 100 மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருந்த சுரங்கப்பாதையை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ள நிலையில், சுக்மா-பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள புவர்த்தியில் பிப்ரவரி மாதம் முன்னோக்கி இயக்கத் தளங்கள் (FOB) நிறுவப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளில் 63 FOB தளங்கள்: சத்தீஸ்கரில் 2020ஆம் ஆண்டு முதல் 63 முன்னோக்கி இயக்கத் தளங்கள் (FOB) அமைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களில் கான்கேர் மாவட்டத்தில் மட்டும் 8 FOB அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (COBRA), சிறப்பு பணிப் படை (STF), மாவட்ட ரிசர்வ் காவலர்கள் (DRG), பஸ்தர் போராளிகள் மற்றும் உள்ளூர் காவல்துறை போன்ற பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கியதே FOB என்று அழைக்கப்படும் இந்த முன்னோக்கி இயக்க தளங்கள் ஆகும்.

இதையும் படிங்க: விவிபாட், வாக்குப்பதிவு இயந்திர வழக்கு: "தேர்தல் சுதந்திரமாகவும், நியமாகவும் நடப்பதை உறுதி செய்க" - உச்ச நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.