ETV Bharat / bharat

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ராஜினாமா! தோல்விக்கு விகே பாண்டியன் காரணமா? - Naveen Patnaik resign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 12:55 PM IST

தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒடிசா முதலமைச்சர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார்.

Etv Bharat
Odisha CM Naveen Patnaik (Photo/ Oidsha Raj Bhawan)

புவனேஷ்வர்: வ18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டபேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன்.4) எண்ணப்பட்டன. இதில் 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில் 78 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆளுங் கட்சியான பிஜூ ஜனதா தளம் 51 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஏறத்தாழ 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தை இழந்து வெளியேறுகிறது. இதையடுத்து ராஜ் பவனில் மாநில ஆளுநர் ரகுபர் தாசை சந்தித்த முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

கடந்த 1997ஆம் ஆண்டு முதல் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் ஆட்சியில் இருந்து வருகிறது. பெரும்பான்மைக்கு 74 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் பாஜக 78 இடங்களை கைப்பற்றிய நிலையில், பிஜூ ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

2024 ஒடிசா சட்டமன்ற தேர்தல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மாநில அரசின் வளர்ச்சி திட்டக் குழு தலைவருமான விகே பாண்டியை சுற்றியே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் "தமிழர் ஒடிசாவை ஆள வேண்டுமா" என்ற முழக்கம் மாநிலம் முழுவதும் பிரதிபலித்ததாக கூறப்படுகிறது.

இந்த தோல்வியின் மூலம் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையையும் நவீன் பட்நாயக் படைக்க தவறினார். 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்புடன் காணப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, இந்த முறை 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் கைகளை எதிர்நோக்கி பாஜக காத்திருக்கிறது. கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பாஜகவின் காலை வாரிய இந்தி பெல்ட்! 2019 -2024 வித்தியாசம் என்ன? தோல்விக்கு இதுதான் முக்கிய காரணமா? - Lok Sabha Election Results 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.