ETV Bharat / bharat

உடையுதா நவீன் பட்நாயக் கோட்டை.. ஒடிசாவில் முதல் முறை பாஜக ஆட்சி? - odisha assembly election 2024

Odisha assembly election results 2024: ஒடிசா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்துக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

BJD PARTY
BJD PARTY (credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 12:56 PM IST

ஒடிசா: 147 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில் நான்கு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதேபோல, 21 மக்களவைத் தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தலும் நடந்து முடிந்தது.

இதில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்துக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்த நிலையில், இன்று அங்கு இரு தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடந்து வரும் நிலையில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி-ஐ பின்னுக்குத் தள்ளி 78 இடங்களில் முன்னிலையில் உள்ளது பாஜக.

இரண்டாம் இடத்தில் உள்ள பிஜேடி 54 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 11 இடங்களிலும் நீடிக்கின்றன. ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 இடங்கள் தேவைப்படும் சூழலில், பாஜக 78 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிஜேடி கட்சி 112 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

அதேநேரம், பாஜக 23 இடங்களில் வென்று எதிர்கட்சி அங்கீகாரத்தை தக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்குச் சென்றது. இந்த முறை பாஜக ஒடிசாவில் வெற்றி பெற்றால் முதல் முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற பெருமையைப் பெறும்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தொடர்ந்து 5 முறை முதல்வராக பதவியேற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர். இந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், மாநிலத்தில் நவீன் பட்நாயக்கின் கோட்டை தகர்க்கப்படும்.

இதையும் படிங்க: பாஜக, காங்கிரசுக்கு டஃப் கொடுக்கும் சுயேட்சைகள்! திரும்பி பார்க்க வைத்த தொகுதிகள்! - Lok Sabha Election 2024 Results

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.